Published : 02 May 2017 05:16 PM
Last Updated : 02 May 2017 05:16 PM

50 சதவீத மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களை பெறத் தவறிய தமிழக அரசு, மருத்துவ கவுன்சிலுக்கு தலா ரூ.1 கோடி அபராதம்

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களிடம் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களை சட்டரீதியாக கேட்டுப் பெறாத தமிழக அரசுக்கும், இதை கண்காணிக்கத் தவறிய இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் தலா ரூ.1 கோடி அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அரசு மருத்துவர் திவ்யா ஷரோன், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு மருத்துவர் எம்.காம ராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:

மருத்துவ கவுன்சில் விதிகளின் படி, தமிழகத்தில் உள்ள தனியார், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், சிறுபான்மை மருத்துவக் கல்லூரி கள் தங்களிடம் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களில் 50 சதவீத இடங்களை அரசிடம் ஒப்படைப் பது இல்லை. அந்த இடங்களையும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களே நிரப்பிக்கொள் கின்றன. இதனால், தகுதிவாய்ந்த பல மாணவர்கள் பாதிக்கப்படுகின் றனர். எனவே, உரிய இடங்களை அரசிடம் ஒப்படைக்குமாறு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், இதை ஒழுங்காக அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘‘தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களிடம் இருந்து தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு முதல் இதுவரை எத்தனை மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்களைப் பெற்றுள்ளது?’’ என்பது உட்பட 10 கேள்விகளை எழுப்பினார். அவரது உத்தரவின் பேரில், தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதில் மனு தாக்கல் செய்தன.

130 பக்க உத்தரவு

அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதி, 130 பக்க விரிவான உத்தரவை நேற்று பிறப் பித்தார். அதில் கூறியிருப்பதாவது:

நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களுக்கான ஒதுக்கீட்டில் 50 சதவீத இடங்களை தமிழக அரசிடம் சட்டரீதியாக ஒப்படைக்க வேண்டும். ஆனால் இதுவரை அவ்வாறு ஒப்படைக்க வில்லை. எனவே, முதுநிலை மருத்துவப் பட்ட மேற்படிப்பு சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு 2017-18ம் ஆண்டுக்கு பிறப்பித்த விளக்கக் குறிப்பேட்டை ரத்து செய்கிறேன்.

அந்த இடங்களை தமிழக அரசு பெற்றுக்கொண்டு, அதன் அடிப்படையில் புதிதாக மொத்த இடங்கள் குறித்த விளக்கக் குறிப்பேட்டை வெளியிட வேண்டும். அதன் அடிப்படையிலேயே மருத்து வப் பட்ட மேற்படிப்புக்கான பொது கலந்தாய்வை நடத்த வேண்டும். இதில், சிறுபான்மை கல்லூரி களுக்கு மட்டும் விலக்கு அளிக் கப்படுகிறது. அவர்கள் தாமாகவே முன்வந்து தங்களுக்கான இடங் களை ஒப்படைத்தால், அதை அரசு பெற்றுக் கொள்ளலாம்.

என்ஆர்ஐ ஒதுக்கீடும் ரத்து

தனியார் மருத்துவக் கல்லூரி கள், நிகர்நிலை பல்கலைக்கழகங் களில் உள்ள 15 சதவீத வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான என்ஆர்ஐ ஒதுக்கீடும் ரத்து செய்யப்படுகிறது. அந்த இடங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு புதிதாக இணைய தளத்தில் அறிவிக்கை வெளியிடும் போது அதில், ‘நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன் றிலும் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கான இடங்கள் எத் தனை? படிப்புக்கான மொத்த கட் டணம் எவ்வளவு? கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தும் கலந்துகொள் ளாதவர்கள் எத்தனை பேர்? கலந்தாய்வில் கலந்துகொண்டும் கல்லூரிகளில் சேராதவர்கள் எத்தனை பேர்? என்ஆர்ஐ ஒதுக் கீட்டில் ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை?’ என்பது போன்ற அனைத்து விவரங்களும் அதில் இடம்பெற வேண்டும்.

ஏமாற்றப்பட்ட மாணவர்கள்

மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக அரசிடம் ஒப்படைத்து வருகின்றன. தமிழகத்தில் இது முறையாக பின்பற்றப்படவில்லை. தமிழக அரசின் இந்த அலட்சியத்தால், தகுதி வாய்ந்த மற்றும் ஏழை மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காமல் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வேண்டுமென்றே ஏமாற்றப் பட்டுள்ளனர்.

தனியார் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என தான் இயற்றிய விதிகளுக்கே எதிராக மருத்துவ கவுன்சில் செயல்பட்டுள்ளது.

அந்த மருத்துவ இடங்கள் பல கோடி ரூபாய்க்கு விற்கப்படுவதற்கு உடந்தையாகவும் இருந்துள்ளது. விதிகளை உருவாக்குவது மட்டுமின்றி, அவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதும் கவுன்சிலின் கடமை.

கடந்த 2000 அக்டோபர் 7 முதல் தனியார் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களிடம் 50 சதவீத இடங்களை சட்டரீதியாக கேட்டுப் பெறாத தமிழக அரசுக்கும், அந்த இடங்கள் முறையாக ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்கத் தவறிய இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அவர் களது அலட்சியப் போக்குக்காக தலா ரூ.1 கோடி அபராதம் விதிக்கப் படுகிறது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

கீழடி ஆராய்ச்சிக்கு வழங்கவேண்டும்

தமிழக அரசு இந்த அபராதத் தொகை ரூ.1 கோடியை சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சிக்கு 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் இந்த அபராதத் தொகை ரூ.1 கோடியை சென்னை தரமணியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்துக்கு (ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு) வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x