Published : 16 May 2017 08:22 AM
Last Updated : 16 May 2017 08:22 AM

கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தொடங்கியது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 320 இடங்கள் இருக்கின்றன.

கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வரும் 31-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை-600 051 என்ற முகவரிக்கு ஜூன் 7-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இரண்டு படிப்புகளுக்கு விண் ணப்பிப்பவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்படும். ஜூலை 19, 20, 21-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கும்.

இத்தகவல்களை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x