Published : 05 May 2017 12:45 PM
Last Updated : 05 May 2017 12:45 PM

மருத்துவ மாணவர்கள் போராட்டம்: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக மருத்துவ மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிமாறு தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக மருத்துவ மாணவர்கள் மருத்துவப் பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு மற்றும் கூடுதல் மதிப்பெண் சலுகை வேண்டி 15 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டம் காரணமாக ஏழை மற்றும் எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சைகள் கிடைக்காமலும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் குறித்து சென்னையைச் சேர்ந்த கதிர்வேலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் என். கிருபாகரன், பார்திபன் அடங்கிய அமர்வு முன் விசரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், "அரசு மருத்துவ மாணவர்களின் போராட்டதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இனி என்ன நடக்க போகிறது? என்பதை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் இன்று மதியம் பிற்பகல் 2.30 மணியளவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x