Published : 01 Feb 2023 03:15 PM
Last Updated : 01 Feb 2023 03:15 PM

சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரி மாதம் மட்டும் 66 லட்சம் பேர் பயணம்

கோப்புப்படம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் ஜனவரி மாதம் மட்டும் 66 லட்சம் பேர் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிட ஜனவரி மாதத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 121 பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 01.01.2022 முதல் 31.12.2022 வரை மொத்தம் 6,09,87,765 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.01.2023 முதல் 31.01.2023 வரை மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 13.01.2023 அன்று 2,65,847 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023, ஜனவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 21,96,536 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி 39,54,733 பயணிகள் பயணித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x