Published : 30 Jan 2023 07:03 AM
Last Updated : 30 Jan 2023 07:03 AM

சென்னை | ஆட்டோ குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்த கோரிக்கை

சென்னை: ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என மனிதநேய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் அ.சாதிக் பாஷா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25-ம், கி.மீட்டருக்கு ரூ.12-ம் தமிழக அரசின் சார்பில் 2013-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அப்போதைய பெட்ரோல் விலை ரூ.60.50.

ஆனால், தற்போது பெட்ரோல் விலை ரூ100.19 ஆக உயர்ந்துள்ளது. ஆட்டோவை ஆண்டுதோறும் புதுப்பிக்கும் எஃப்சி கட்டணம், 2013-ல் ரூ.225 ஆக இருந்தது. இன்று ரூ.625 ஆக உயர்ந்துள்ளது.

அரசு போக்குவரத்துக்கழக பேருந்து கட்டணம்கூட 2013-க்கு பின்னர் 2 முறை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.50 ஆகவும், கி.மீட்டர் ஒன்றுக்கு ரூ.25 ஆகவும் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x