Last Updated : 04 Dec, 2016 10:55 AM

 

Published : 04 Dec 2016 10:55 AM
Last Updated : 04 Dec 2016 10:55 AM

டிச.7-ல் புதிய அந்தோணியார் தேவாலயம் திறப்பு விழா: தடையை மீறி கச்சத்தீவு செல்ல மீனவர்கள் ஆயத்தம் - ராமேசுவரம் பங்குத் தந்தைக்கு மட்டும் அழைப்பு

கச்சத்தீவில் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ள புதிய அந்தோணி யார் தேவாலயம் திறப்பு விழாவில் தடையை மீறி கலந்து கொள்ள தமிழக மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் கச்சத் தீவு அமைந்துள்ளது. ராமேசு வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங் கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக் குப்பன் பட்டங்கட்டி ஆகியோர் 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந் தோணியார் தேவாலயத்தை நிறுவினர். இத்தீவு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்த மாக இருந்தது.

இத்தீவை மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 8.7.1974-ம் தேதி இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகாவுக்கு எழுதிக் கொடுத்தார். கச்சத்தீவு ஒப்பந்தப் படி அங்குள்ள அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 1983-ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு திருவிழா நிறுத்தப்பட் டது. போர் முடிவுற்ற பின்னர் 2010-ம் ஆண்டு முதல் கச்சத் தீவு திருவிழா தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

இந்நிலையில், மே 8-ம் தேதி யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் கச்சத்தீவில் இலங்கை அரசு சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய அந்தோணியார் தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

இதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தமிழக மீனவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் இந்தியாவும், இலங்கையும் கூட்டாகச் சேர்ந்து, தேவாலயத்தை மீண்டும் கட்டு வதற்கு இலங்கை அரசை சம்மதிக் கச் செய்ய வேண்டும் என பிரத மர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் கச்சத்தீவில் புதிய அந்தோணியார் தேவா லயத்தை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம் டிச.7-ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக நெடுந் தீவு ஆயர் ஜெயரஞ்சன் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து புதிய தேவாலயத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்ள ராமேசுவரத்தில் இருந்து 3 படகில் 100 பக்தர்களை யாவது அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் சார்பில் மத்திய, மாநில அரசுக்கு ராமேசுவரம் பங்குத்தந்தை சகாய ராஜ் கோரிக்கை வைத்தார். இந்த வேண்டுகோளை தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் மத்திய அரசுக்கு வியாழக்கிழமை கடிதம் மூலம் தெரிவித்தார்.

இதற்கு, கச்சத்தீவில் நடைபெற இருப்பது சிறிய விழா. எனவே தமிழக மீனவர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. அதேபோல இலங்கை பக்தர்களுக்கும் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என வெளியுறவுத் துறை அமைச் சகம் நேற்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம் யாழ்ப் பாணத்தில் நேற்று கூறியதாவது:

கச்சத்தீவு புதிய தேவாலயத் திருவிழா எளிய முறையில் நடப்பதால் ராமேசுவரம் பங்குத் தந்தைக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் பங்குத் தந்தை தன்னுடன் மூன்று பேரை அழைத்து வரலாம் என் றார். இதனிடையே தமிழக மீனவர் கள் தடையை மீறி டிசம்பர் 7-ம் தேதி கச்சத்தீவு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x