Last Updated : 21 Dec, 2016 11:05 AM

 

Published : 21 Dec 2016 11:05 AM
Last Updated : 21 Dec 2016 11:05 AM

நாகையில் ரூ.2.13 கோடி மோசடி எதிரொலி: தமிழகம் முழுவதும் சம்பளப் பிரிவு போலீஸார் கூண்டோடு மாற்றம்

நாகை மாவட்ட காவல் அலுவல கத்தில் சம்பளப் பிரிவில் பணிபுரிந்த தலைமைக் காவலர் ரூ.2.13 கோடி மோசடி செய்ததால் தமிழகம் முழு வதும் சம்பள கணக்குப் பிரிவு போலீஸார் கூண்டோடு மாற்றப்பட் டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் போலீஸார் சிலருக்கு பணப் பலன் சரியாகக் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட் டோர் புகாரில் நாகை எஸ்பி அலுவ லக சம்பள கணக்குப் பிரிவில் தணிக்கை நடந்தது. அப்பிரிவில் மாற்றுப் பணியில் இருந்த ஏகே.சத்திரம் தலைமைக் காவலர் இதயதுல்லா என்பவர் போலி பில்கள் தயாரித்து, கருவூலம் மூலம் உறவினர்கள் பெயரில் வங்கிகளில் பணம் செலுத்தச் செய்து ரூ.2.13 கோடி கையாடல் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

இச்சம்பவம் எதிரொலியாக தமி ழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல் அலுவலகங்களிலும் சம்ப ளம், பணப் பலன் பிரிவுகளில் மாற்றுப் பணியில் இருந்த ஆயுதப் படை, காவல் நிலைய போலீஸார் அந்தந்த காவல் நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.பெரும் பாலான காவல் அலுவலகங்களில் புதியவர்கள் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். இவர்களுக்கு பணப் பலன் தொடர்பான ஆவணங்களை கையாளுதல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரும்பாலும் காவல்துறை அலுவலகங்களில் சம்பளக் கணக்கு, பணப் பலன் பிரிவுகளில் போலீஸாரின் எண்ணிக்கையைப் பொறுத்து 10 முதல் 15 போலீஸார் வரை பணி அமர்த்தப்படுவர். இவர்கள் காவல் நிலையம், ஆயுதப்படையினர் மாற்றுப் பணியில் இருப்பர். நாகையில் ஏட்டு இதயதுல்லா பணம் கையாடல் செய்த சம்பவத்தால் அனைத்து மாவட்ட காவல் துறை அலுவலகங்களில் சம்பளப் பிரிவு போலீஸார் மாற்றப்பட்டுள்ளனர்.

கூண்டோடு மாற்றப்பட்டுள்ள தால் சில மாதம் சம்பளம், பணப் பலன்களுக்கான பணிகளில் தொய்வு ஏற்படக்கூடும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x