Published : 23 Jan 2023 05:08 PM
Last Updated : 23 Jan 2023 05:08 PM

தமிழகத்தில் 60 ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு: தெற்கு ரயில்வே மெகா திட்டம் 

கிண்டி ரயில் நிலையம்

சென்னை: அமிரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 60 ரயில் நிலையங்களை மேம்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் அமிரீத் பாரத் ரயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையை ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. இதன்படி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்தும், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு பெருந்திட்டம் தயார் செய்யப்படும். மிக முக்கியமாக குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களின் மேல்தளத்தில் அங்காடிகள், வணிக நிறுவனங்கள் அமைக்கப்படும்.

ரயில் நிலையங்களில் ஏற்கெனவே உள்ள வசதிகளுக்கு மாற்றாக மேம்பாடும் மற்றும் புதிய வசதிகளை அறிமுகம் செய்யப்படும். மேலும், தகவல் பலகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வு அறைகள், அதிகாரிகள் ஆய்வு அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தில் 60 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம்:

சேலம் கோட்டம்: மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, திருப்பூர், போத்தனூர், ஈரோடு, சேலம், நாமக்கல், ஊட்டி, குன்னூர், கரூர், பொம்மிடி, சின்ன சேலம், திருப்பத்தூர், சமால்பட்டி, மொரப்பூர்

மதுரை கோட்டம்: புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்குடி, பரமக்குடி, அம்பாசமுத்திரம், புனலூர், திருச்செந்தூர், தென்காசி, மணப்பாறை, சோழவந்தான், பழனி, விருதுநகர், கோவில்பட்டி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர்,

திருச்சி கோட்டம்: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், காரைக்கால், மன்னார்குடி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், அரியலூர், திருவரங்கம், திருவண்ணாமலை, விருத்தாசலம், வேலூர் கண்டோன்மென்ட், போளூர், லால்குடி

சென்னைக் கோட்டம்: கிண்டி, மாம்பலம், சென்னை கடற்கரை, சென்னை பூங்கா, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளுர், செயினிட் தாமஸ் மவுன்ட், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, சூலூர் பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு பெருந்திட்டம் தயார் செய்ய தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த பெருந்திட்டத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x