Published : 21 Jan 2023 12:12 PM
Last Updated : 21 Jan 2023 12:12 PM

ஒன்றரை ஆண்டு சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்கிறோம்: அமைச்சர் கே.என்.நேரு

பிரச்சாரத்தில் அமைச்சர்கள்

சென்னை: ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஒன்றரை ஆண்டு சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இந்நிலையில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே திமுகவினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தை தொடங்கினார்.

இதன்படி இன்று (ஜன.21) காலை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு," ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரிவித்துள்ளார். தோழமை கட்சியின் வெற்றிக்கு அமைச்சர் முத்துசாமி தலைமையில் தேர்தல் பணியாற்ற வந்து உள்ளோம். அமைச்சர் முத்துசாமி சொல்லும் பணியை செய்ய வந்துள்ளோம். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற முழுமையாக உழைப்போம். இந்த ஆட்சியின் ஓன்றரை ஆண்டு கால சாதனைகளை கூறி வாக்கு சேகரிப்போம்." என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x