Published : 21 Jan 2023 06:15 AM
Last Updated : 21 Jan 2023 06:15 AM

நத்தம் | கொசவபட்டியில் பாதியில் முடிந்த ஜல்லிக்கட்டு: தொடங்கி வைத்த எஸ்.பி.யே நிறுத்தக் கூறி உத்தரவிட்டார்

கொசவபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரரை தூக்கி வீசிய காளை.

நத்தம்: கொசவபட்டி ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப் படவில்லை எனக் கூறி, போட் டியை தொடங்கி வைத்த காவல் கண்காணிப்பாளரே பாதியில் நிறுத்த உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித உத்திரியமாதா அந்தோணியார் பேராலய திருவிழாவை யொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக் கட்டுப் போட்டி நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக் கட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் ஒப்புதல் தெரி வித்தனர்.

நேற்று காலை ஜல்லிக்கட்டுப் போட்டியை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். கோயில் காளையை தொடர்ந்து வாடிவாசல் வழியாக மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமை யாளர்களுக்கும் டிவி, கட்டில், பாத்திரம், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.

போட்டி நடந்து கொண்டிருந்த போது ஆட்சியர் ச.விசாகன், ப.வேலுச்சாமி எம்.பி. உள்ளிட்டோர் வந்தனர். அப்போது, மூன்றாவது சுற்று நடந்து கொண்டிருந்த நிலையில், சில காளைகள் கயிறு கட்டப்பட்ட நிலையில் வெளி யேறுவதை கவனித்த ஆட்சியர், அது தொடர்பாக எச்சரித்தார்.

இதையடுத்து போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் கயிறுகள் அகற்றப்படுவதை முறையாக கண்காணித்து காளை கள் அவிழ்த்துவிடப்பட்டன. அவ்வப்போது மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமை யாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. பதிவு செய்யப் படாத காளைகளையும் களத்தில் இறக்கியது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு பாதியில் முடிவடைந்த நிலையில் அங்கு திரண்டிருந்த
மக்களை கலைந்து போகச் செய்த போலீஸார்.

ஒவ்வொரு சுற்றிலும் மாடுபிடி வீரர்கள் காயமடைவது அதிகரித்து வந்தது. மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 21 பேர் காயமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையிலி ருந்த 10 பேர் ஆம்புலன்ஸ் மூலம் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போட்டியின் 8-வது சுற்று முடிவடைந்த நிலையில் 420 காளைகளும் அவிழ்த்துவிடப் பட்டிருந்தன. 350 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கியிருந்தனர். அப்போது, ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப் படவில்லை என பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து பிற்பகல் 2.10 மணிக்கு அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் உடனடியாக போட்டியை நிறுத்த உத்தரவிட்டார்.

இதனால் கடைசி 2 சுற்றுகளில் களமிறங்க ஆர்வமுடன் இருந்த மாடுபிடி வீரர்களும், காளைகளை அவிழ்த்துவிட காத்திருந்த உரிமை யாளர்களும் கலைந்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் கலைந்து செல்லாமல் நின்றதால் போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடைய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப் பட்ட செய்திக்குறிப்பில் கூறியுள் ளதாவது: கொசவபட்டி ஜல்லிக்கட்டில் 465 காளைகள் பதிவு செய்யப்பட்டு அனைத்து காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. குறிப்பிட்ட நேரத்துக்குள் வருகை தராத காளைகளுக்கு விழா கமிட்டி சார்பில் பரிசுப்பொருட்கள் மட்டும் வழங் கப்பட்டன என தெரிவிக்கப்பட் டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x