Published : 02 Dec 2016 08:46 AM
Last Updated : 02 Dec 2016 08:46 AM

தற்போதைய பணத்தேவையை அரசால் சமாளிக்க முடியாது: வங்கி ஊழியர் சம்மேளன தமிழக பொதுச் செயலாளர் கருத்து

தற்போது ஏற்பட்டுள்ள பணத் தேவையை சமாளிக்கும் அளவுக்கு அரசு அச்சகங்களால் பணத்தை அச் சடிக்க முடியாது. எனவே இப்பிரச் சினை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளர் சி.பி. கிருஷ்ணன் கூறியதாவது:

புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப் பதற்காக பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ரிசர்வ் வங்கியால் 1995 பிப்ர வரி 3-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. பெங்களூரு நகரை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் இந்நிறு வனம் மைசூர் மற்றும் மேற்குவங்க மாநிலம் சல்போனியில் ரூபாய் நோட்டு களை அச்சடிக்கும் 2 அச்சகங்களை நிர்வகிக்கிறது. இந்த இரு அச்சகங் களும் வருடத்துக்கு ரூபாய் தாள்கள் எண்ணிக்கையில் ஆயிரத்து 600 கோடி அளவுக்கு அச்சடிக்கும் திறமை வாய்ந்தவை.

இவை தவிர மகாராஷ்டிர மாநிலம் நாசிக், மத்தியப்பிரதேசம் மாநிலம் தேவாஸ் ஆகிய இடங்களிலும் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகங் கள் உள்ளன. இவை இரண்டும் மொத்த ரூபாய் தாள்களின் தேவையில் 40 சதவீதம் அச்சடிக்கும் திறன் வாய்ந்தவை. இந்த 4 அச்சகங்களும் 2 ஷிப்டுகள் மூலம் வருடத்துக்கு 2 ஆயிரத்து 666 கோடி அளவுக்கு அச்சடிக்கும் திறன்படைத்தவை.

மத்திய அரசு வழங்கிய புள்ளி விவரப்படி கடந்த மாதம் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 17 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாய். இதில் 45 சதவீதம் 500 ரூபாய் நோட்டுகள். இதன் மதிப்பு 7 லட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபாய். இது எண்ணிக்கையில் ஆயிரத்து 578 கோடி தாள்கள். மேலும், 39 சதவீதம் ஆயிரம் ரூபாய் நோட்டு கள். இதன் மதிப்பு 6 லட்சத்து 84 ஆயிரம் கோடி. இது எண்ணிக்கையில் 684 கோடி தாள்கள். ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 342 கோடி தாள்கள் அச்சடித்தாலே போதுமானது. மத்திய அரசு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை செப்டம்பர் மாதமே தொடங்கி விட்டதாக கூறுகிறது. அதன்படி ஏறக்குறைய 2 மாத காலத்தில் அப்பணி நிறைவடைந்திருக்கும்.

நான்கு அச்சகங்களின் திறன் வருடத் துக்கு 2 ஆயிரத்து 666 கோடி தாள்கள். 3 ஷிப்டுகளில் பணிபுரிந்தால் இதன் திறன் 4 ஆயிரம் கோடி தாள்களாக உயரும். இதில் 20 சதவீத திறன் 10 ரூபா யில் இருந்து 100 ரூபாய் நோட்டு கள் வரை அச்சடிக்க பயன்படுத்தப் படும். மீதமுள்ள 80 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதற் காக பயன்படுத்துவதாக எடுத்துக் கொண்டால் இதனை அச்சடிப்பதற் கான திறன் வருடத்துக்கு 3 ஆயிரத்து கோடி தாள்களாகும்.

புழக்கத்தில் இருந்து செல்லாத தாக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை ஆயிரத்து 578 கோடி தாள்கள். இதில் சுமார் 20 சதவீதம் வரை கறுப்புப் பணமாக இருக்கும் என்றும், அந்தப் பணம் வங்கிகளுக்கு வராது என்றும் கூறப்படுகிறது. அதை அப்படியே ஏற்றுக் கொண்டால் அந்த அளவுக்கு புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதைக் குறைத்துக் கொள்ளலாம். இதன்படி 20 சதவீதத்தை கழித்தால் ஆயிரத்து 262 கோடி தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும்.

ஆனால், ஆயிரம் ரூபாய் நோட்டுக் கள் முற்றிலுமாக நீக்கப்பட்டதால் குறைந்தபட்சம் அதில் 25 சதவீதமாவது புதிய 500 ரூபாய் நோட்டுக்களாக புழக்கத்தில் வந்தால்தான் நிலைமை சகஜமாகும் என்றும் ஒரு கணிப்பு உள்ளது. அவ்வாறெனில் கூடுதலாக 342 கோடி தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். இதன்படி மொத்த தேவையாக ஆயிரத்து 604 கோடி எண்ணிக் கையில் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட வேண் டும்.

இவற்றை அச்சடிக்க 6 மாத கால மாகும். நவம்பர் மாதம் முதல் வாரத் திலேயே இப்பணி தொடங்கப்பட்டி ருந்தாலும் தேவையான அளவு 500 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து முடிக்க 2017 ஏப்ரல் இறுதியாகும். எனவே மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கூறுவது போல் 50 நாட்களில் ரூபாய் தட்டுப்பாடு தீர்வதற்கான வாய்ப்பில்லை. இதனால் ரூபாய் தட்டுப்பாட்டைத் தீர்க்க விரைந்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இவ்வாறு கிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் முன்னாள் அதிகாரி கே.சுந்தரேசன் கூறும்போது, ஜப்பானில் உள்ள கோமாரி நிறுவனமும், சுவிட்சர் லாந்தில் உள்ள கே.பி.ஏ. கியோரி நிறுவனமும் இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் இயந் திரங்களை வடிவமைத்து தந்துள்ளன. தேவைப்பட்டால் இந்நிறுவனங்களிடம் இருந்து தேவைக்கு ஏற்ப புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து பெறலாம்’ என்றார்

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தற்போது ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு அச்சகங்கள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டு கூடுதல் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. இதையும் மீறி தேவை ஏற்பட்டால் வெளிநாட்டில் இருந்து பணத்தை அச்சடித்து கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x