Last Updated : 08 Dec, 2016 08:41 AM

 

Published : 08 Dec 2016 08:41 AM
Last Updated : 08 Dec 2016 08:41 AM

கருணாநிதியை நலம் விசாரிக்காமல் டெல்லி திரும்பிய ராகுல் காந்தி - திமுகவினர் கடும் அதிருப்தி: ராகுலுக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்

சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்காமல் டெல்லி திரும்பியது திமுகவினரை கடும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. இது தொடர்பாக ராகுல் காந்திக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை காரணமாக கடந்த 2 மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். உடலில் கொப்புளங் கள் ஏற்பட்டுள்ளதால் குடும்பத்தினர் தவிர மற்ற யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.ஆனாலும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், புதுச் சேரி முதல்வர் நாராயணசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்று திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலினிடம் கருணா நிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துச் சென்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற் காக கடந்த அக்டோபர் 7-ம் தேதி ராகுல் காந்தி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அப்போது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியை அவர் சந்திக்கவில்லை. இதனால் திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

கடந்த 1-ம் தேதி ஆழ்வார் பேட்டை காவேரி மருத்துவமனை யில் கருணாநிதி அனுமதிக்கப்பட் டார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். கடந்த வாரம் டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம்நபி ஆசாத்தை சந்தித்த கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள், கருணாநிதியை சந்திக்க ராகுல் காந்தி வராதது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மறைந்த முதல் வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று முன்தினம் (டிச. 6) சென்னை வந்த ராகுல் காந்தி, இறுதிச் சடங்கிலும் பங்கேற்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் எம்ஜிஆர் நினைவிடத்தில் ராகுல் காந்தி காத்திருந்தார். ஆனாலும் மருத் துவமனையில் சிகிச்சை பெறும் கருணாநிதியை அவர் சந்திக்காமல் டெல்லி திரும்பினார். இது திமுகவினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கருணாநிதி இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர். இந்திரா முதல் சோனியா காந்தி வரை எண்ணற்ற தலைவர்களுடன் அரசியல் செய் தவர். நேரு குடும்பத்தின் மீதும், காங்கிரஸ் கட்சியின் மீதும் அக் கறை கொண்டவர். சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதும் உடனடியாக நலம் விசாரித்து ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், 2 முறை சென்னை வந்த ராகுல் காந்தி, உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை சந்திக்கவில்லை. இதனால் ஸ்டாலின், கனிமொழி மட்டுமல்ல கருணாநிதியும் கடும் அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளார். ஸ்டாலின், கனிமொழி உள்ளிட் டோர் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸிடம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்'' என்றார்.

பீட்டர் அல்போன்ஸ் கடிதம்

இதையடுத்து, ராகுல் காந்திக்கு நேற்று இ-மெயில் மூலம் அனுப்பிய கடிதத்தில் திமுகவினரின் அதிருப்தி யையும், வருத்தத்தையும் பீட்டர் அல்போன்ஸ் வெளிப்படுத்தியுள் ளார். அவர் தனது கடிதத்தில், ‘‘ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுகவை பாஜக தனது கட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. எனவே அதிமுகவை நம்பி, கூட்டணி கட்சியான திமுகவை இழந்துவிடக் கூடாது. இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரான கருணாநிதியை சந்திக்காமல் நீங்கள் திரும் பியது திமுகவினரை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, அவரைச் சந்தித்து நலம் விசாரிக்க விரைவில் சென்னை வர வேண்டும்'’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராகுல் காந்தியின் பாரா முகம், திருநாவுக்கரசரின் நட வடிக்கைகளால் திமுக - காங்கிரஸ் உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x