Published : 26 Dec 2016 09:06 AM
Last Updated : 26 Dec 2016 09:06 AM

இலவச பொருட்களை வழங்கி வந்த சிறப்பு திட்ட செயலாக்கப் பிரிவு கலைப்பு: கணினி ஆபரேட்டர்கள் வேலை இழப்பு

கடந்த 10 ஆண்டுகளாக வருவாய்த் துறையின்கீழ் செயல்பட்டு வந்த சிறப்பு திட்ட செயலாக்கப் பிரிவு கலைக்கப்பட்டதால் கணினி ஆபரேட்டர்கள் 288 பேர் வேலை இழந்துள்ளனர். இந்த பிரிவில் பணிபுரிந்த துணை ஆட்சியர்கள் மாற்றுப் பணி ஒதுக்கீடுக்காக காத்திருக்கின்றனர்.

கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது, தேர்தல் வாக்குறுதியான இலவச கலர் டிவி வழங்குவதற்கு, வருவாய்த் துறையின்கீழ் சிறப்பு திட்ட செயலாக்கப் பிரிவு தொடங்கப்பட்டது. இந்த பிரிவில் மாவட்ட அளவில் ஒரு துணை ஆட்சியரும், தாலுகா அளவில் ஒரு துணை வட்டாட்சியரும் பணிகளை மேற்கொண்டனர்.

இதில் பணிபுரிய, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படை யில் பட்டப்படிப்பு மற்றும் கணினி பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த கணினி ஆபரேட்டர்களுக்கு தொகுப் பூதியமாக மாதம் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. மாநிலம் முழு வதும் மாவட்ட ஆட்சியர் அலு வலகம், வட்டாட்சியர் அலுவலகங் களில் 288 பேர் பணிபுரிந்தனர்.

இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டில் அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை விநியோகிக்கும் பணியில் சிறப்பு திட்ட செய லாக்கப் பிரிவு ஈடுபட்டது.

கடந்த 2013-ல் கணினி ஆப ரேட்டர்களுக்கான தொகுப்பூ தியம் ரூ.7 ஆயிரமாக உயர்த்தப் பட்டது. சட்டப்பேரவை தொகுதி வாரியாக இலவச பொருட்களை பெற்ற பயனாளிகளின் பெயர்களை ஆன்லைனில் பதிவு செய்தல். ஆதார் எண்ணை பதிவு செய்தல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மேலும், வெள்ள நிவாரணப் பணி, தேர்தல் பணி ஆகியவை தொடர்பான புள்ளி விவரங்களை பதிவிடும் பணியிலும் இவர்களை வருவாய்த்துறையினர் ஈடுபடுத்தி னர். தங்களை பணி வரன் முறைப்படுத்த வேண்டும் என கணினி ஆபரேட்டர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது அரசிடம் எந்த இலவச பொருட் கள் வழங்கும் திட்டமும் இல்லை என்பதால், கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் சிறப்பு திட்ட செயலாக்கப் பிரிவு கலைக்கப் படுவதாக அரசு ஆணை பிறப் பித்தது. இதையடுத்து தற்காலிக பணியாளர்களான கணினி ஆபரேட்டர்கள் அனை வரும் வேலை இழந்தனர்.

இதில் பணியாற்றிய 32 துணை ஆட்சியர்கள், 288 துணை வட்டாட்சியர்களுக்கு வருவாய்த் துறையில் மாற்றுப் பணியிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி துணை வட்டாட்சியர்கள் பணிநிரவல் மூலம் அந்தந்த மாவட்டத்திலேயே வேறு பணிக்குச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பணியிழந்த கணினி ஆபரேட்டர்கள் சிலர் கூறும்போது, “கடந்த செப்டம்பர் மாதம் பணியிலிருந்து விடுவித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனால் மாநிலம் முழுவதும் 288 பேர் வேலை இழந்துள்ளோம். இதில், பலருக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங் கப்படவில்லை. நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். எங்களுக்கு வேறு ஏதாவது பணி வழங்க அரசு முன்வரவேண்டும்” என்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் இரா.மங் கலப்பாண்டியன் கூறியதாவது:

சமூக பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பிற வருவாய்த்துறை பணிகளில் கணினி ஆபரேட்டர்கள் தேவை உள்ளது. எனவே, சிறப்பு திட்ட செயலாக்கப் பிரிவில் பணிபுரிந்த கணினி ஆபரேட்டர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x