Published : 02 Jan 2023 10:47 PM
Last Updated : 02 Jan 2023 10:47 PM

சென்னை முதல் திருவனந்தபுரம் வரை 10 நாட்களில் 1000 கி.மீ - ஆட்டோவில் செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: சென்னை முதல் திருவனந்தபுரம் வரை 10 நாட்கள் 1000 கிலோ மீட்டர் தூரத்தை ஆட்டோவில் சாகச சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்தனர்.

தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக சென்னை முதல் திருவனந்தபுரம் வரை பாரம்பரிய பயணத்தை ஜெர்மனி, நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 70 பேர் சாகச சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். இவர் 32 ஆட்டோக்களில் தனித்தனி குழுவாக பிரிந்து சென்னையில் கடந்த 28-ம் தேதி குழு தனது பாரம்பரிய பயணத்தை தொடங்கியது. முன்னதாக வெளிநாட்டு பயணிகளுக்கு தமிழகத்தின் விதிமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

இந்த பராம்பரிய பயணத்தில் தென்னிந்தியாவின் கலாச்சார சிறப்பு மிக்க நகரங்களான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகியவற்றில் பயணிக்கின்றனர். இந்த பயணத்தின் போது புகழ்பெற்ற மாமல்லபுரம் கோயில், தஞ்சை பெருவுடையார் கோயில், மகாமக குளம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், தூத்துக்குடி பனிமயமாதா கோயில், கன்னியாகுமரி சூரிய உதயம், அஸ்தமனம், கடவுளின் தேசமான கேரளத்தின் அழகு ஆகியவற்றை கண்டு ரசிக்க உள்ளனர்.

புத்தாண்டை மதுரையில் கொண்டாடிய சுற்றுலா பயணிகள், சிறப்பு மிக்க வைணவ திருவிழாவான வைகுண்டா ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த மேத்யூ கூறுகையில், ‘‘உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, பல்வேறு கலாச்சார பின்புலம் கொண்ட மக்களை சந்தித்து வருகிறோம். தற்போது தென்னிந்திய கலாச்சாரம், பண்பாடுகள் குறித்து அறிய இம்மக்களின் பிரதான போக்குவரத்து வாகனமான ஆட்டோவில் பயணித்து வருகிறோம். தமிழக மக்களின் உணவு மற்றும் வரவேற்பு எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பயணத்தில் ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள புகழ்மிக்க உணவுகள், வரலாற்று தொடர்புடைய இடங்களுக்கு செல்ல உள்ளோம்’’, என்றவர். இறுதியாக ‘நன்றி’ என்று கூறிவிட்டு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x