Published : 01 Jan 2023 12:38 PM
Last Updated : 01 Jan 2023 12:38 PM

தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: 27 பேருக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்தர ரெட்டி வெளியிட்டுள்ள செய்தி: ஐபிஎஸ் அதிகாரிகள் அருண், கல்பனா நாயக், அவி பிரகாஷ், வித்யா ஜெயந்த் குல்கர்னி, பிரவீன் குமார் அபிநபு, நரேந்திரன் நாயர், ரூபேஷ் குமார் மீனா, சத்ய பிரியா, விஜேயந்திர பிதாரி, சி.விஜயகுமார், திஷா மிட்டல், துரை, மகேஷ், அபிநவ் குமார், சிபி சக்ரவர்த்தி, ஜியாவுல் ஹக், பி.விஜயகுமார், பகலவன், சாந்தி, விஜயலெட்சுமி, மூர்த்தி, ஜெயச்சந்திரன், மனோகர், தர்மராஜன், சமந்த் ரோஹன் ராஜேந்திரா ஆகியோருக்கு பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.

காவல்துறை பயிற்சி பள்ளி ஐஜியாக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி அருண், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் கண்காணிப்பு துறையின் ஐஜி கல்பனா நாயக், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு காவல்துறை பயிற்சி மையத்தின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகள் அவி பிரகாஷ், வித்யா ஜெயந்த் குல்கர்னி ஆகியோரும் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் அபிநபுவுக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கி, திருப்பூர் மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி நரேந்திரன் நாயருக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கி மதுரை மாநகர ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் டிஐஜி சத்ய பிரியாவுக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கி, திருச்சி மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர ஆணையர் அபிநவ் குமாருக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கி, திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மயிலாப்பூர் துணை ஆணையரான திஷா மிட்டலுக்கு, டிஐஜியாக பதவி உயர்வு வழங்கி சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிபி சக்ரவர்த்திக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கி சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மகேஷூக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கி, உளவுத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவனுக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கி, காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகரனுக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கி, சென்னை காவல்துறை தலைமையகத்தின் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் எஸ்.பி. மணி தாம்பரம் காவல் ஆணையரகத்தின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்.பி. அதிவீரபாண்டியன், தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி. செந்தில்குமார் திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x