Published : 17 Dec 2016 09:16 AM
Last Updated : 17 Dec 2016 09:16 AM

ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகன உரிமக் கட்டணத்தை 25% அதிகரிக்க முடிவு

ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பணிகளில் ஈடுபட் டுள்ள வாகனங்களின் உரிமக் கட்ட ணத்தை 25 சதவீதம் வரை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள் ளது.

இதுகுறித்து அனைத்து ரயில்வே கோட்ட மேலாளர்கள் வாயிலாக ரயில் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

ரயில் நிலைய வளாகத்துக்குள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், டாக்சிகள், மினி பஸ் கள், வேன்களுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை ரயில்வே துறை மூலம் உரிமம் வழங்கப்படுகிறது.

இதற்கான கட்டணம் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.

அதன்படி, பெருநகரங்களில் ஆட்டோ கட்டணம் ரூ.900-ல் இருந்து ரூ.1200, டாக்சி ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரம், மினி பஸ் ரூ.3 ஆயி ரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நடுத்தர நகரங்களில் ஆட்டோ வுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.670, டாக்சி ரூ.800-ல் இருந்து ரூ.1070, மினி பஸ் மற்றும் வேன் ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், சிறுநகரங்களில் ஆட்டோ ரூ.400-ல் இருந்து ரூ.530, டாக்சி ரூ.700-ல் இருந்து ரூ.930, மினி பஸ் மற்றும் மினி வேன் ரூ.1200-ல் இருந்து ரூ.1600 எனவும் உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x