Published : 27 Dec 2016 09:23 AM
Last Updated : 27 Dec 2016 09:23 AM

ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள்: உயிர்வாழ் சான்று அளிக்க காலக்கெடு நீட்டிப்பு

தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதிய தாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மண் டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக முதன்மை ஆணை யர் சலில் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ள தாவது: வருங்கால வைப்பு நிதிச் சட்டம் உள்ளடக்கிய தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995 மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர் கள் உயிர்வாழ் சான்றிதழ் மற்றும் மறுமணம் செய்துகொள்ளவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் ஜனவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே வங்கியில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஓய்வூதிய தாரர்கள் ‘Jeevan Praman Portal’ என்ற இணையதளம் மூலமாக உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இந்த வசதியை பொதுசேவை மையம், தமிழ்நாடு அரசு இணைய சேவை மையம் மூலமாகவும் பெறலாம். ஓய்வூதியதாரர்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தையும் அணுகலாம். மேற்கண்ட மையங் களை அணுகும்போது ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓய்வூதியம் வழங்கு ஆணை எண், கைப்பேசி ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x