Last Updated : 15 Dec, 2022 01:59 PM

 

Published : 15 Dec 2022 01:59 PM
Last Updated : 15 Dec 2022 01:59 PM

“கடற்சுவர் எழுப்பி குமரி மீனவ கிராமங்களைக் காக்க வேண்டும்” - மக்களவையில் விஜய் வசந்த் எம்.பி வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி: “மீனவர்களைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பக் கருவிகளை பயன்படுத்த வேண்டும்” என்று நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம்.பி. விஜய் வசந்த் பேசிய: ''புயல் மற்றும் இயற்கை சீற்றங்களின்போது கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடற்கரை கிராமங்களில் வாழும் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக மத்திய அரசு புதிய தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கடத்த காலங்களில் ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் புயலின்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை. இதனால், கடலில் தத்தளித்த பல மீனவர்களை நாம் இழக்க நேரிட்டது. நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் எனது கன்னியாகுமரி தொகுதியைத் சேர்ந்தவர்கள். 72 கிலோ மீட்டர் நீள கடற்கரை கொண்டது எனது தொகுதி. இதில் 42 மீனவ கிராமங்கள் உள்ளன. கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்பதற்கு ஹெலிகாப்டர், ஹெலிகாப்டர் இறங்குதளம், அதிவிரைவு படகுகள் கொண்ட கடலோரக் காவல் படை நிலையம் ஒன்றினை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கடல் அரிப்புகளால் கிராமங்கள் கடலுக்குள் அடித்துக்கொண்டு செல்லப்படுவதை தடுக்க நிரந்தரமாக கடற்சுவர் எழுப்பி எமது மீனவ கிராமங்களை காக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்'' என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x