Published : 01 Dec 2016 09:58 AM
Last Updated : 01 Dec 2016 09:58 AM

எடுக்காத ஸ்கேனுக்கு பணம் வசூலித்த குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ரூ.38 ஆயிரம் அபராதம்

குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரூ.38 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சிபுரம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குன்றத்தூர் அடுத்த பழந்தண் டலம் கலைஞர் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது தாத்தா ஜெகநாதன் உடல் நிலை சரியில்லாததால் குரோம் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 12. 10. 2014ம் ஆண்டு சேர்க் கப்பட்டார். இதில் சிகிச்சை பலன் இன்றி 13.10.2014 அன்று காலை 11 மணிக்கு இறந்து விட்டார். இறக்கும் முன்பு ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறி கட்டணமாக ரூ. 3120 வசூலிக்கப்பட்டது.

ஆனால் ஸ்கேன் எடுப்ப தற்குள் ஜெகநாதன் இறந்து விட்டார். பிறகு சிகிச்சை கட்டண மாக மொத்தம் ரூ.23 ஆயிரத்து 532 செலுத்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஸ்கேன் எடுக்கும் முன் ஜெகநாதன் இறந்து விட்டதால் அந்த கட்டணத்தை விலக்கு அளிக்க செந்தில் குமார் நிர்வாகத் திடம் வேண்டுகோள் விடுத்தார் ஆனால் நிர்வாகம் ஏற்க மறுத்து விட்டது.

இந்நிலையில் மீண்டும் சில நாட்கள் கழித்து ஸ்கேனுக்கு கட்டணம் வசூலித்தது தவறு அதனை திரும்பித் தர வேண்டும் எனக் கூறி மருத்துவமனை நிர் வாத்திடம் மனு அளித்தார். ஆனால் மனு மீது நடவடிக்கை எடுக்க வில்லை.

இந்த விவகாரத்தில் அலைக் கழிப்புக்கு ஆளான செந்தில் குமார் செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 25-2-15 அன்று வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சிவனந்த ஜோதி அளித்த தீர்ப்பில் ‘ஸ்கேன் செலவு ரூ. 3,120 அதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.30 ஆயிரம், வழக்குச் செலவு ரூ.5 ஆயிரம் ஆக மொத்தம் ரூ. 38 ஆயிரத்து 120-ஐ மாதத்துக்குள் வழங்க வேண்டும். தவறினால் மாதம் 9 சதவீதம் வட்டி சேர்த்து செலுத்த கொடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x