Published : 28 Nov 2022 07:37 AM
Last Updated : 28 Nov 2022 07:37 AM

அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இல்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மனு ஒன்றுஅளித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அடுத்த மாதம் 5-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக மெரினாகடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர். தொடர்ந்து எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் திறந்தவெளி மேடை அமைத்து உறுதிமொழி மேற்கொள்ள உள்ளனர். வரும் 5-ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கான அனுமதியும், பாதுகாப்பும் அளிக்குமாறு காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளேன்.

மருத்துவ தலைநகராக உள்ள சென்னையின் அரசு மருத்துவமனைகளில் தவறான சிகிச்சை அளிக்கப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகின்றுன. அரசு மருத்துவமனைகளுக்கு செல்லவேமக்கள் பயப்படுகின்றனர். கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்தார். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் தற்போது குழந்தை இறந்துள்ளது. அரசு மருத்துவமனை மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. அதிமுகவைப் பொருத்தவரை தினகரன், ஓபிஎஸ் கதை முடிந்தகதை. அதை தொடர விரும்பவில்லை என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x