Published : 02 Dec 2016 06:13 PM
Last Updated : 02 Dec 2016 06:13 PM

கிண்டி மகளிர் ஐடிஐயில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கிண்டியில் உள்ள மகளிர் அரசு ஐடிஐயில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு டிசம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கிண்டியில் உள்ள மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 2016-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதியன்று குறைந்த பட்சம் 30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் டிசம்பர் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள், முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்), ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை- 32 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x