Published : 07 Nov 2016 09:54 AM
Last Updated : 07 Nov 2016 09:54 AM

இலவச வேட்டி, சேலை தரம் பார்க்கும் பணி தீவிரம்: பொங்கலுக்கு முன்பே பயனாளிகளுக்கு வழங்க தமிழக அரசு திட்டம்

பொங்கலுக்கு ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகள் தரம் பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து அவை அந்தந்த தாலுகாவாரியாக அனுப்பி வைக்கப்படும். பொங்க லுக்கு முன்பே இலவச வேட்டி, சேலைகள் மக்களுக்கு வழங்கப் பட்டுவிடலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள்.

கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு அளிக்க வும், அதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், 1983-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 1 கோடியே 68 லட்சம் வேட்டி, சேலைகள் 3.35 கோடி பேருக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட் டது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு வேட்டி, சேலைகள் வழங்கும் ஆயத்தப் பணிகள் கடந்த 2 மாதங் களுக்கு முன்பே தொடங்கப் பட்டுவிட்டதாக தெரிவிக்கின்றனர் இப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி கள். அதற்காக ஈரோடு, சேலம் பகுதிகளில் விசைத்தறிகள் மூலம் நெய்யப்பட்ட வேட்டி, சேலை களையும், மதுரை, வேலூர் பகுதி களில் கைத்தறி மற்றும் பெடல் தறியின் மூலம் நெய்யப்பட்ட வேட்டி, சேலைகள், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தர ஆய்வு மையங்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை அனுப்பி வைக்கப்படுகின்றன.

அவற்றை அங்கு உள்ள பணி யாளர்கள் சேதம், அழுக்கு கறை, அகலம் குறைவு உள்ளிட்ட விஷயங் களை இரண்டு அடுக்குகளாக சோதனை செய்து, இறுதியில் தரம் பார்க்கப்பட்டது என்ற முத்திரையை பதித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தாலுகா மையங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்த தர ஆய்வு மையங்கள் கோவை, ஈரோடு, சேலம், மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் கருமத் தம்பட்டி பேரூராட்சி திருமண மண்டபத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த பணிகள் நடை பெற்று வருகின்றன. தொடக்கத்தில் இப்பணிகளில் 30 பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர். வேட்டி, சேலை கள் வரத்து தொடர்ந்து அதிகரித்த தால், தற்போது 70 பேருக்கு மேல் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்த மையத்தின் அலுவலர்கள் கூறியதாவது: தமிழ்நாடு ஜவுளிக் கழகம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மூலமே ஆரம்பம் முதல் இப்பணி கள் நடந்து வந்தன. கடந்த 2 ஆண்டு களாக இப்பணி கோ-ஆப்டெக் ஸுக்கு வரவில்லை. இந்த ஆண்டு வழக்கம்போல் கொடுத் துள்ளார்கள். அதுவும் தமிழ்நாடு ஜவுளிக் கழகத்துக்கும், எங்களுக் கும் 50 சதவீதமாக பிரித்து வழங்கி யுள்ளார்கள்.

இந்த மையத்துக்கு 13 லட்சம் சேலைகளும், 13 லட்சம் வேட்டிகளும் தரச்சோதனைக்கு கொடுப்பதாக குறியீடு நிர்ணயித் துள்ளார்கள். அதில் 50 சதவீதம் வேட்டியும், 30 சதவீதம் சேலை களும் வந்து பணிகளை முடித்து விட்டோம். அதில் 1-ல் இருந்து 1.5 சதவீத அளவில் மட்டுமே தரச் சோதனையில் கழிவு வந்துள்ளது.

இந்த சோதனைகள் முடிய, முடிய கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் எந்தெந்த தாலுகா அலுவலகங்களுக்கு எவ்வளவு வேட்டி, சேலைகள் அனுப்ப வேண்டும் என்ற பட்டி யல் வரும். அதற்கேற்ப இவற்றை அனுப்பி வைப்போம்.

கோவை மையத்தில்தான் 13 லட்சம் வேட்டி, சேலைகள் குறியீடு தரப்பட்டுள்ளன. ஈரோடு மையத்தில் சுமார் 60 லட்சத்துக்கு மேலும், சேலத்தில் 63 லட்சத்துக்கு மேலும் வேட்டி, சேலைகள் குறியீடு தரப்பட்டுள்ளன. இப்பணி பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு வரை நடக்கும். வேட்டி, சேலைகள் நெய்யப்பட்டு வரும் வேகத்தை பார்த்தால் சீக்கிரமே இப்பணி முடிந்துவிடும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x