Published : 19 Nov 2022 04:47 AM
Last Updated : 19 Nov 2022 04:47 AM

வ.உ.சி. 150-வது பிறந்த ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு - இணைய பக்கத்தையும் தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, சிறப்பு மலரை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பு இணைய பக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வ.உ.சி.யின் 150-வது பிறந்த ஆண்டு சிறப்பு மலரை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

மேலும், வ.உ.சி. எழுதிய 11 நூல்கள், 7 பதிப்புகள், உரை எழுதிய 3 நூல்கள், மொழியாக்கம் செய்யப்பட்ட 4 நூல்கள், வ.உ.சி. பற்றிய20 வரலாற்று நூல்கள், 6 நூற்றாண்டுப் பதிவுகள், 2 மலர்கள், அவர்குறித்த கட்டுரைகள் அடங்கிய ஒருதொகுப்பு, 5 ஆய்வு நூல்கள் மற்றும்6 பிற நூல்கள், வ.உ.சி. தொடர்பான 7 கையெழுத்துப் பிரதிகள், 17 ஒளிப்படங்கள், ஒளி–ஒலி ஆவணங்கள், 38 பிற ஆவணங்கள் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு ஆகியவை மின்னுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

இவற்றை உள்ளடக்கி தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்நூலக இணையதளத்தில், சிறப்பு இணையப் பக்கம் (https://www.tamildigitallibrary.in/voc) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய பக்கத்தை பொதுமக்கள்மற்றும் ஆய்வாளர்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x