சீர்காழியில் 24 மணி நேரத்தில் 44 செ.மீ மழை பதிவு: கடலூரை கனமழை புரட்டிப் போட்டது

மழை பாதிப்பு ஆய்வு செய்த அமைச்சர்
மழை பாதிப்பு ஆய்வு செய்த அமைச்சர்
Updated on
1 min read

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 24 மணி நேரத்தில் 44 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் மின கனமழை பெய்துள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தை கனமழை புரட்டி போட்டுள்ளது. நேற்று (நவ.11) காலை 8.30 முதல் இன்று (நவ.12) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சீர்காழியில் 44 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கொள்ளிடத்தில் 32 செ.மீ, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 31 செ.மீ, அண்ணாமலை நகரில் 28 செ.மீ, ஏடபிள்யூஎஸ் சிதம்பரத்தில் 27 செ.மீ, புவனகிரியில் 21 செ.மீ, கே.எம்.கோவிலில் 19 செ.மீ என்று மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 10 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பதிவாகி உள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான மெய்யநாதன் இன்று காலை அங்கு நேரடியாக சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in