Published : 16 Nov 2016 09:51 AM
Last Updated : 16 Nov 2016 09:51 AM

ஆம்னி பஸ் கட்டணம் நிர்ணயம் செய்ய நீதிபதி தலைமையில் குழு: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு, 4 மாதங்களில் ஆம்னி பஸ் கட்டணத்தை நிர்ணயம் செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

ஆம்னி பஸ்களில் தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப் படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில் நீதிபதிகள் எஸ்.நாக முத்து, எம்.வி.முரளிதரன் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:

ஆம்னி பஸ் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் உள்துறை இணைச் செயலர் (போக்குவரத்து), சாலை போக்கு வரத்து நிறுவனத்தின் இயக்குநர், போக்குவரத்து ஆணையர், நிதித் துறை இணைச் செயலர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவை தமிழக அரசு 2 வாரங்களில் அமைக்க வேண்டும். இக்குழு செயல்படுவதற்குத் தேவையான அலுவலகம், பணி யாளர்களை அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

இக்குழு 7 நாளில் முதல் கூட்டத்தை கூட்ட வேண்டும். இந்தக் கூட்டத்தில் ஆம்னி பஸ் உரிமை யாளர்கள், ஏஜென்ட் சங்கத்தினர், பொதுமக்களிடம் கட்டணம் நிர்ண யம் தொடர்பாக கருத்துகள் கேட்டு, குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச ஆம்னி பஸ் கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். இது தொடர்பாக 4 மாதங்களில் தமிழக அரசுக்கு பரிந்துரைகளை இந்தக் குழு வழங்க வேண்டும். இந்தப் பரிந்துரையை 12 வாரங்களில் அரசிதழில் வெளியிட்டு தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

காவல்துறை நடவடிக்கை

இந்த முடிவுக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள், ஏஜென்ட்கள் சங்கத்தினர் கட்டுப்பட வேண்டும். அதுவரை ஆம்னி பஸ்கள் மோட்டார் வாகனச் சட்டத்தைப் பின்பற்றி செயல்பட வேண்டும். இதை மீறுபவர்கள் மீது போக்கு வரத்து, வருவாய், காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x