Published : 06 Nov 2016 01:17 PM
Last Updated : 06 Nov 2016 01:17 PM

தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு 2,000 சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு

கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி தமிழகத்தின் பல பகுதி களில் இருந்து திருவண்ணா மலைக்கு 2.000 சிறப்புப் பேருந்து கள் இயக்கப்பட உள்ளன. சென் னையில் இருந்து மட்டும் 600 பேருந்துகளை இயக்க அரசு போக்கு வரத்துக் கழகம் முடிவு செய்துள் ளது.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்களுக்கு சிறப்பாக நடை பெறும். இந்த ஆண்டு திருவிழா, வரும் டிசம்பர் 3-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 8-ம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 9-ம் தேதி தேரோட்ட மும் நடக்கின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தீபத் திரு விழா டிசம்பர் 12-ம் தேதி நடக் கிறது. அன்று மாலை அண்ணா மலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. 13-ம் தேதி பவுணர்மி விழாவும் நடக்கிறது.

இதில், கலந்துகொள்ள சென்னை உட்பட பல்வேறு மாவட் டங்களில் இருந்து ஆயிரக்கணக் கான மக்கள் திருவண்ணாமலைக்கு செல்வர். எனவே, பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இந்த ஆண்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், சென்னையில் இருந்து மட்டும் சுமார் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது தொடர்பாக போக்குவரத் துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘பக்தர்களின் வசதிக்காக இந்த ஆண்டும் தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை, சேலம், புதுச்சேரி, வேலூர், காஞ்சிபுரம், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, திருச்சி, நாகப்பட்டினம், விழுப்புரம் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளோம். சென்னையில் இருந்து மட்டும் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x