Published : 24 Nov 2016 09:44 AM
Last Updated : 24 Nov 2016 09:44 AM

டிசம்பர் 30 வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: தென்மண்டல லாரி உரிமையாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தல்

பண மதிப்பு நீக்க அறிவிப்பால் லாரி போக்குவரத்துத் தொழில் முடங் கியுள்ள நிலையில், டிசம்பர் 30-ம் தேதி வரை சுங்கக் கட்டண வசூ லிக்கக் கூடாது என தென்மண்டல லாரி உரிமையாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் சண்முகப்பா சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் தினமும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் லாரிகள் நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. பண மதிப்பு நீக்க அறிவிப்பால் 80 சதவீத லாரிகள் இயக்கப்பட முடியாமல் நிறுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவை டிசம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். மீண்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தொடங்கினால், 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாரிகள் இயக்கம் நிறுத்தப்படும்.

பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை பெட்ரோல் பங்க்களில் பயன்படுத்திக் கொள் வதற்கான அவகாசம் 24-ம் தேதி என்பதை டிசம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். லாரிகளின் ஆர்.சி புத்தக நகலைப் பெற்றுக் கொண்டு ஒரு லாரிக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் பணப் பரிவர்த்தனை செய்துகொள்ள வங்கிகள் அனுமதிக்க வேண்டும். நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகிய வற்றில் லாரி உரிமையாளர்கள் பெற்றுள்ள கடன்களுக்கான தவணைகளை 3 மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் நாளொன்றுக்கு ரூ.40 கோடி வசூலாகிறது என மத்திய அரசு தெரிவிக்கிறது. இதற்கு பதிலாக டீசலுக்கு லிட்டருக்கு ரூ.1.50 கூடுதலாக நாங்கள் வரி செலுத்த சம்மதிக்கிறோம். இதன்மூலமாக ரூ.70 கோடி கிடைக்கும் என்பதால், நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் குமாரசாமி, உடனிருந்தார்.

சண்முகப்பா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x