Published : 29 Nov 2016 09:34 AM
Last Updated : 29 Nov 2016 09:34 AM

மைசூர் நீதிமன்ற குண்டு வெடிப்பு வழக்கில் மதுரையில் ஒருவர் கைது; மேலும் 2 பேர் சிக்கினர்

அல்காய்தாவுடன் தொடர்பா என தீவிர விசாரணை

மைசூர் நீதிமன்றத்தில் குண்டு வைத்த வழக்கில் மதுரையில் ஒரு வரை தேசிய புலனாய்வு பிரிவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர். இவருக்கும் பிடிபட்ட மேலும் 2 பேரிடம் அல்காய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர் புள்ளதா என தேசிய புலனாய்வு பிரிவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மைசூர் நீதிமன்ற வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில்

தொடர்புடைய சிலர் மதுரையில் தங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ) போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. டெல்லியைச் சேர்ந்த தேசிய புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழுவினர் மதுரையில் கடந்த 3 நாட்களாக முகாமிட்டு குறிப்பிட்ட பகுதிகளில் கண்காணித்து வந்தனர். இதற்காக உள்ளூர் போலீஸார் உதவியைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் முனிச்சாலை இஸ்மா யில்புரத்தில் அப்பாஸ் அலி, புதூர் உஸ்மான் நகர் எம். கரீம், கண்ணனேந்தல் அருகிலுள்ள ஜிஆர். நகரில் உள்ள அயூப்கான் ஆகியோரின் வீடுகளை சுற்றி வளைத்து 3 பேரையும் பிடித்துச் சென்றனர். இவர்களை ரகசிய இடத்தில் வைத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில் மைசூர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அப்பாஸ் அலியை கைது செய்தனர்.

மேலும், பிடிபட்ட இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பிரதமர் நரேந் திர மோடி உட்பட 22 முக்கிய தலைவர்களை கொலை செய்ய வும், பல்வேறு நாடுகளில் உள்ள 6 தூதரகங்களுக்கு மிரட்டல் விடுத் ததாகவும் அல்காய்தா உட்பட சில தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததாகவும் கிடைத்த தகவல்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும், தேசிய புலனாய்வு பிரிவினரிடம் சிக்காமல் தப்பிய ஹக்கீம், தாவூத் சுலைமான் ஆகி யோரை மதுரை உட்பட சில இடங்களில் தீவிரமாக தேடி வரு கின்றனர்.

இது குறித்து நகர் காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த இரு தினங் களுக்கு முன்பு, தேசிய புலனாய்வு போலீஸார் எங்களை தொடர்பு கொண்டனர். நீதிமன்றத்தில் குண்டு வைத்த வழக்கு தொடர்பாக மதுரையில் விசாரிக்கவேண்டும் எனக் கூறினர். தேசிய புலனாய்வு படையினர் மதுரை வந்து பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அவர் களுக்கு உதவ உள்ளூர் போலீ ஸாரும் அனுப்பப்பட்டனர். அப்பாஸ் அலி, கரீம், அயூப்கான் ஆகியோரை பிடித்ததாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மூவர் மீதும் மதுரை உட்பட தமிழகத்தில் வழக்கு இருப்பதாக தெரியவில்லை. அப்பாஸ் அலிக்கு மட்டும் மைசூர் நீதிமன்றத்தில் குண்டு வைத்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததால் அவரை மட்டும் கைது செய்துள்ளதாக புலனாய்வு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர் என்றார்.

சென்னையில் ஒருவரிடம் விசாரணை

இதற்கிடையில், சென்னை திரு வான்மியூரில் ஒரு வீட்டில் பதுங்கி யிருந்த தாவூத் சுலைமான்(30) என்ற மென்பொருள் நிறுவன ஊழி யர் நேற்று மாலை பிடிபட்டார். அவரிடமும் விசாரணை நடக்கிறது.

நள்ளிரவில் கைது

மதுரையில் தேசிய புலனாய்வு போலீஸாரால் கைது செய்யப்பட்ட அப்பாஸ் அலியின் தந்தை நைனாமுகமது கூறியது: நேற்று முன்தினம் நள்ளிரவில் 3 பேர் சாதாரண உடையில் வீட்டுக்கு வந்து கதவை தட்டினர். கதவை திறந்த அப்பாஸ் அலியை அவர்கள் அருகில் நிறுத்தி இருந்த காருக்கு அழைத்துச் சென்றனர். காரில் 5 பேர் இருந்தனர். எதற்காக அழைத்து செல்கிறீர்கள் எனக் கேட்டேன். ஒரு வழக்கு தொடர்பாக விசாரித்துவிட்டு, காலையில் அனுப்பிவிடுகிறோம் எனக் கூறி அழைத்துச் சென்றனர். மகனை கைது செய்துவிட்டதாக நேற்று மதியம் தெரிந்து கொண்டேன். அப்பாஸ் அலி 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். என்னுடன் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். எனக்கு தெரிந்து வேறு யாருடனும் அவர் போகமாட்டார் என்றார்.

சமீபத்தில் திருமணம்

அயூப்கான் தந்தை முகமது தஸ்லிம் கூறியது: நேற்றுமுன்தினம் தொழுகை முடித்துவிட்டு வீட்டுக்கு அயூப்கான் வந்தார். சில நேரத்தில் அங்கு வந்த 3 பேர் மகனை பிடித்து சென்றனர். அயூப்கான் பிஎஸ்ஸி படித்துள்ளார். காது கேளாதோர் பயன்படுத்தும் கருவிகளை விற்கும் கடையில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு 15 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. என் மகன் கைது செய்யப்பட்டுள்ளாரா என எந்த தகவலும் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x