Published : 26 Nov 2016 08:48 AM
Last Updated : 26 Nov 2016 08:48 AM

நவம்பர் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம்: எதிர்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து நவம்பர் 28-ம் தேதி தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்), எஸ்யுசிஐ ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினர்.

இதையடுத்து அந்த கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் ஜி.ராம கிருஷ்ணன், இரா.முத்தரசன், எஸ்.குமாரசாமி, ஏ.ரங்கசாமி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக் கையில் கூறியிருப்பதாவது:

முறையான முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல் மத்திய அரசு இந்த அறிவிப்பைச் செய்துள்ளது. 2 வாரங்களுக்கு மேலாகியும் கூட நிலைமை இன்னும் சீரடைய வில்லை. இத்தகைய சூழ்நிலை யில், வெளிநாடுகளில் கணக்கு வைத்திருப்போரின் பெயர்களை வெளியிட வேண்டும். அவர் களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 28-ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரி கட்சிகள் கண்ட ஆர்ப் பாட்டம் நடத்துவது என தீர் மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயி களும், வணிகர்களும், ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:

புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 86 சதவீதத்தை செல்லாது என அறிவித்து, அதன்மூலம் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்காக வங்கிகள், ஏடிஎம்கள் முன்பு மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 60 கோடி மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை என்பதை பாஜக அரசு புரிந்து கொண்டதாக தெரியவில்லை.

எனவே, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத முடிவை கண்டித்து நவம்பர் 28-ம் தேதி நாடு முழுவதும் கண்ட ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முடிவெடுத்து அறிவித்து உள்ளன.

இதனடிப்படையில், தமிழகத் தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கிறது. மாவட்டங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்:

மோடி அரசின் சட்டவிரோதமான நடவடிக்கையை தடுத்து நிறுத்தா விட்டால் இந்துத்துவ வாதிகள் ஜனநாயக ஆட்சி முறையை ஒழித்து சர்வாதிகார ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவார்கள். அதற்கு ஜனநாயக சக்திகள் இடம் தரக்கூடாது. இதை உணர்ந்துதான் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் நவம்பர் 28-ம் தேதியை தேசிய எதிர்ப்பு நாளாக அறிவித்திருக்கின்றன.

எனவே, அந்தப் போராட் டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம். நவம்பர் 28-ம் தேதி தமிழ் நாட்டில் இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கிணைந்து நடத்தவுள்ள அனைத்து விதமான போராட்டங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x