Published : 27 Oct 2022 06:45 AM
Last Updated : 27 Oct 2022 06:45 AM

ஆன்லைனில் விண்ணப்பிப்பது நிறைவு: உதவி மருத்துவர் பணிக்கு நவம்பரில் எழுத்து தேர்வு

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் 1,021 மருத்துவர்கள், செவிலியர்கள், 889 மருந்தாளுநர்கள், டெக்னீஷியன்கள் என பல்வேறு பணிகளில் 4,308 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 889 மருந்தாளுநர்களை நிரப்பும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆர்பி கடந்த 11-ம் தேதி வெளியிட்டது. www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பதும் அன்றே தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த 25-ம்தேதி முடிவடைந்தது. எம்பிபிஎஸ்முடித்த ஏராளமான மருத்துவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதுபற்றி எம்ஆர்பி அதிகாரிகள் கூறும்போது, “1,021 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது முடிவடைந்துள்ளது. கணினி வழி எழுத்து தேர்வு நவம்பரில் நடக்க உள்ளது. தேதிவிரைவில் அறிவிக்கப்படும். அதன்பிறகு, ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x