Published : 24 Oct 2022 06:41 AM
Last Updated : 24 Oct 2022 06:41 AM

மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்துகளை அதிகளவில் இயக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு மாவட்டங்களுக்கு இடையேயும் அதிக எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் பொது மக்களுக்காக அதிக எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததால் பெருமளவு பயன் ஏற்பட்டுள்ளது.

குறைந்த கட்டணம்: குறிப்பாக லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து அவரவர் ஊருக்கு செல்வதற்கு அரசுப்போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் குறைவானப் பயணக் கட்டணத்தில் செல்ல முடிகிறது. அதே சமயம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு பணிகளில் பணிபுரிபவர்கள் அவரவர் மாவட்டத்துக்கு தீபாவளிப் பண்டிகைக்குப் போக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

எண்ணிக்கை குறைவு: ஆனால் இவர்களின் போக்குவரத்துக்கு அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இருசக்கர வாகனம் அல்லது வாடகைக்கு வாகனம் எடுத்துசெல்ல வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, அனைத்து மாவட்டங்களுக்கு இடையேயும் அதிக எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்துக்கும், குறைவான செலவில் பயணிப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x