Published : 16 Nov 2016 09:13 AM
Last Updated : 16 Nov 2016 09:13 AM

சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே சபரிமலை சிறப்பு ரயில்கள்

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கொல்லம்-விசாகப்பட்டினம் சுவிதா சிறப்பு ரயில் (எண் 82856): நவம்பர் 21,25,28 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும்.

சென்னை சென்ட்ரல்-கொல்லம் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (எண் 06041): நவம்பர் 16,21,23,28,30 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.45 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

கொல்லம்-சென்னை சென்ட்ரல் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (எண் 06042): நவம்பர் 17,22,24,29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

திருச்சி-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (எண் 06026): நவம்பர் 19,26 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 9.10 மணிக்கு சென்னை வந்தடையும்.

சென்னை எழும்பூர்-திருச்சி சிறப்பு கட்டண ரயில் (எண் 06025): நவம்பர் 21, 28 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 8.10 மணிக்கு திருச்சி சென்றடையும்.

சென்னை எழும்பூர்-கொல்லம் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (எண் 06045): நவம்பர் 19,26 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 2.15 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

கொல்லம்-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (எண் 06046): நவம்பர் 20,27 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.40 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

சென்னை சென்ட்ரல்-கொல்லம் சிறப்பு கட்டண ரயில் (எண் 06047): நவம்பர் 16,23,30 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

கொல்லம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு கட்டண ரயில் (எண் 06048): நவம்பர் 17, 24 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x