Published : 21 Oct 2022 06:47 AM
Last Updated : 21 Oct 2022 06:47 AM

ஹெக்சா இன்னோவேஷன் நிறுவனம் சார்பில் 5 வகையான மின்சார வாகனங்கள் அறிமுகம்

ஹெக்ஸா இன்னோவேஷன் நிறுவன மின்சார இருசக்கர வாகனங்கள்அறிமுக விழாவில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அழகிரியா குழுமத் தைச் சேர்ந்த யு.நயினார் ராவுத்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை: ஹெக்ஸா இன்னோவேஷன் நிறுவனம் மின்சாரத்தால் இயங்கும்5 வகையான இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஹெக்ஸா இன்னோவேஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெட்ரோல் விலைஉச்சத்தில் உள்ள நிலையில் பலரும் மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்களை நாடத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் துபாயை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெக்ஸா இன்னோவேஷன் (Hexa innovation) நிறுவனம் இந்தியாவில் மின்சார மோட்டார் கொண்டு இயங்கும் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. உலக அளவிலான பலதரப்பட்ட தரக்கட்டுப்பாடு சோதனைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, இந்நிறுவன இருசக்கர வாகனங்கள் தற்போது இந்தியச் சந்தைக்கு வந்துள்ளன. இந்தியாவின் மொத்த விற்பனை பிரதிநிதியாக அழகிரியா குழும நிறுவனம் செயல்படும் என ஹெக்ஸா இன்னோவேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது அறிமுகமாகியுள்ள ஹெக்ஸா இன்னோவேஷன் வாகனங்கள் குறித்து அழகிரியா குழுமத்தைச் சேர்ந்த யு.நயினார் ராவுத்தர் கூறும்போது, "ஹெக்ஸா இன்னோவேஷன் நிறுவன தயாரிப்புகளில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இது 3 யூனிட் மின்சாரத்தைச் சேமித்து வைத்து 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் படைத்தது. சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எவ்வளவு வேகம் போனாலும் சத்தமின்றி செல்லும், பராமரிப்பு செலவு மிகக்குறைவு. உதிரி பாகங்கள் தாராளமாகக் கிடைக்கும். பலகண்கவர் நிறங்களில் கிடைக்கும். லித்தியம் அயர்ன் பாட்டரி இருப்பதால் தீப்பிடிக்கும் அச்சம் இல்லை; நீடித்து உழைக்கும். 5 வகை மாடல்களில் இவ்வாகனங்கள் கிடைக்கும். தொடர்புக்கு 9962861444 என்ற எண்ணை அழைக்கலாம்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x