Published : 20 Oct 2022 06:14 AM
Last Updated : 20 Oct 2022 06:14 AM

2 ஆண்டுகளில் 861 தரைப் பாலங்களை மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 861 தரைப் பாலங்களை மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்: தென்காசி உறுப்பினர் பழனிநாடார் (காங்கிரஸ்): தென்காசி தொகுதியில் தரைப் பாலத்தை மாற்றி மேம்பாலம் கட்டித் தரவேண்டும்.

நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு: தங்கள் தொகுதியில் பாலங்கள் கட்டுவது குறித்து சட்டப்பேரவையில் பல்வேறு உறுப்பினர்கள் கேட்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது 1,281 தரைப் பாலங்கள் உள்ளன. இவற்றை மேம்பாலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22-ம் ஆண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 648 பாலங்கள், நபார்டு கிராமப்புற சாலைகள் திட்டத்தில் 41 பாலங்கள் என 689 தரைப் பாலங்களை ரூ.755 கோடியில் மேம்பாலமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த 2022-23-ம் நிதி ஆண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் 66, நபார்டு திட்டத்தில் 84, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 22 என 172 பாலங்களுக்கான பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளில் 861 தரைப் பாலங்களை மேம்பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 2023-24-ம் நிதி ஆண்டில் மற்ற பாலங்களும் மாற்றப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x