Published : 19 Oct 2022 06:49 AM
Last Updated : 19 Oct 2022 06:49 AM

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐசிஎஃப் ஊழியர் ஆர்ப்பாட்டம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐசிஎஃப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தியாவின் பெருமைக்குரிய ஐசிஎஃப், ‘வந்தே பாரத்’ ரயில் உற்பத்தி தொழில்நுட்பத்தை ‘டெக்னாலஜி பார்ட்னர்’ என்ற பெயரில்தனியார் பன்னாட்டு நிறுவனத்துக்கு தாரை வார்ப்பதை கைவிடவேண்டும். குரூப்-டி தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். குரூப்-சி பிரிவில் உள்ள 1,700 காலியிடங்களையும் குரூப்-டிபிரிவில் உள்ள 300 காலியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐசிஎஃப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் சென்னை ஐசிஎஃப்-ல் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஐசிஎஃப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் எஸ்.ராமலிங்கம், செயல் தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பேசினர்.பொதுச்செயலாளர் பா.ராஜாராமன் பேசும்போது, ‘‘மெட்ரோ ரயில் தயாரிப்பதற்கு வசதியாக, மின்சார மோட்டார் தயாரிப்பு கூடத்தை சென்னை ஐசிஎஃப்-ல்ஏற்படுத்த வேண்டும்.

இதன்மூலம், மெட்ரோ ரயில்தயாரிக்க நடைபெறும் ஒப்பந்தப்புள்ளி ஏலத்தில் பங்கேற்க முடியும்.எனவே, விரைவாக நிதி ஒதுக்கி, ஐசிஎஃப்-ல் மின்சார மோட்டார் கூடம் அமைக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x