Published : 19 Nov 2016 09:52 AM
Last Updated : 19 Nov 2016 09:52 AM

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாவட்டந்தோறும் ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து: அவசர சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் அவசர சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தி மாவட்டந் தோறும் தலா ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் திருச்சியில் நேற்று தொடங்கியது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை கடந்த 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்டந்தோறும் தலா ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நேற்று தொடங்கியது.

தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக் கட்டு பாதுகாப்பு நலச்சங்க செய லாளர் ஒண்டிராஜ், முதல் கையெழுத்தை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “நடப்பு நாடாளு மன்றக் கூட்டத்தொடரில் அவசரச் சட்டம் கொண்டு வந்து, ஜல்லிக் கட்டு நடைபெற வழிவகை செய்ய வேண்டும். இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புமாறு தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்பிக்களைச் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்” என்றார்.

வீர விளையாட்டு மீட்புக் கழக மாநிலத் தலைவர் டி.ராஜேஷ் கூறிய போது, “ஜல்லிக்கட்டை பாதுகாக் கக் கோரி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த கையெ ழுத்து இயக்கம் நடைபெறும். இங்கு மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை உள்ளிட்ட நாடு களிலும் அங்கு உள்ள தமிழர்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்து கின்றனர். பொதுமக்களிடம் பெறப் பட்ட கையெழுத்துகள் அடங்கிய ஆவணங்களை டிசம்பர் முதல் வாரத்தில் குடியரசுத் தலைவர், பிரதமரைச் சந்தித்து அளிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தக்கூடிய ஏர்- ஏறு அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் முரளிகிருஷ்ணன் கூறிய போது, “ஜல்லிக்கட்டு, வீர விளை யாட்டு மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம். இதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மாட்டு வண்டிப் பந்தயம், ரேக்ளா, எருதாட்டம், சேவல் சண்டை, கிடா முட்டு போன்ற பழமையான கலாச்சார நிகழ்வுகள், தடையின்றி மீண்டும் நடைபெறும் வகையில் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு போதுமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x