Published : 19 Nov 2016 10:10 AM
Last Updated : 19 Nov 2016 10:10 AM

உத்திரமேரூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் வள மீட்பு பூங்காவாக உருமாறிய குப்பைமேடு: உரங்கள், செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை

உத்திரமேரூர் பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் குப்பை மேடாக இருந்த பகுதி தற்போது வள மீட்பு பூங்காவாக உருமாறியுள்ளது. குப்பைகளை உரமாக மாற்றி விற்பனை செய்வதுடன், பல்வேறு மலர், காய்கறி மற்றும் மூலிகைச் செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.

உத்திரமேரூர் பேரூராட்சியில் 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சிக்குச் சுற்றுலா மற்றும் பணி நிமித்தமாக தினசரி 3 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இந்த பேரூராட்சியில் நாள் ஒன்றுக்கு 6 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இந்த குப்பைகள் உத்திரமேரூர் அருகே உள்ள ஓர் இடத்தில் கொட்டப்படுவதால் அப்பகுதியை குப்பைமேடு என்கின்றனர்.

இந்த குப்பைமேடு பகுதியில், குப்பைகள் எரிக்கப்பட்டதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் ஒரு முன்மாதிரி செயல்திட்டத்தை உத் திரமேரூர் பேரூராட்சி உருவாக்கி யது. இப்பகுதியில் சேகரமாகும் குப்பையின் அளவு துல்லியமாக கணக்கிடப்பட்டது. அதன்படி குடியிருப்புப் பகுதிகளில் 4.5 டன், வணிக பகுதியில் 1 டன், பொது இடங்களில் 0.5 டன் கழிவுகளும், குப்பைகளும் சேகரமாயின.

இந்தக் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று தரம் பிரித்து உரமாக்க முடிவு செய் யப்பட்டது. அதற்கான தொழில் நுட்பம் தேவைப்பட்டதால், ‘ஹேண்ட் இன் ஹேண்ட்’ என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

உத்திரமேரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் தயாரிக்கப்பட்ட உரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட செடியில் விளைந்த காய்கறிகள்.

தற்போது இந்த குப்பைகள் மட்கும் கழிவுகள் 2.40 டன், மறுசுழற்சி கழிவுகள் 1.80 டன், பிளாஸ்டிக் கழிவுகள் 20 கிலோ, கலப்பு கழிவுகள் 1.5 டன், மண் கழிவுகள் 0.3 டன் என தரம் பிரிக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து மட்கும் கழிவுகள் உரமாக மாற்றப்படு கின்றன. அதேபகுதியில் மண் புழு உரமும் தயாரிக்கப்படுகிறது. முதலில் 10 வார்டுகளில் சேகர மாகும் குப்பைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், தற்போது உத்திரமேரூர் பேரூராட்சி முழுவதுக்குமான திட்டமாக உருமாறியுள்ளது. இத்திட்டத்தால் குப்பைமேடு பகுதி தற்போது வள மீட்பு பூங்காவாக உருமாறியுள்ளது. இங்கு பூச்செடிகளும், காய்கறி செடிகளும் வளர்க்கப்படுகின்றன. இங்கு தயாராகும் உரம், மலர் மற் றும் காய்கறி செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

விவசாயிகள் ஆர்வம்

இத்திட்டம் குறித்து பேரூராட்சி யின் செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது:

2008-ம் ஆண்டே செயல் திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் 10 வார்டுகளில் இத் திட்டத்தைச் செயல்படுத்தினோம். இது வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்.1-ம் தேதி முதல் முழுமையான திட்டமாக வடிவம் பெற்றுள்ளது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற் படுத்தாமல் குப்பைகள் எரிக்கப் பட்டு, பயனுள்ள உரங்களைத் தயாரித்து சந்தையில் விற்பனை செய்கிறோம். இந்த உரங்களைத் விவசாயிகள் பலர் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இந்த திட் டத்துக்காக ஏற்கெனவே ரூ.8 லட்சம், தற்போது ரூ.31 லட்சமும் செலவு செய்துள்ளோம். திட்டம் வெற்றி அடைந்துள்ளது மகிழ்ச்சியளிக் கிறது என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x