Published : 23 Nov 2016 08:31 AM
Last Updated : 23 Nov 2016 08:31 AM

அரவக்குறிச்சி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பாஜக கோரிக்கை

அரவக்குறிச்சி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் பதிவான வாக்குகள், கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன. தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.பிரபு, தேமுதிக வேட்பாளர் எம்.முத்து ஆகியோர் தங்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இடம் ஒதுக்கவில்லை என்று கூறி ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று புகார் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இடைத்தேர்தலை பல கட்சிகள் சந்திக்க மறுத்த சூழலில், களத்தில் இருந்தால்தான் களங்கத்தை போக்க முடியும் என்பதால் நாங்கள் களத்தில் நின்று தேர்தலைச் சந்தித்தோம். எங் களுக்கு கிடைக்க வேண்டிய வாக்கு கள் நேர்மையாக கிடைக்க வேண்டும். அரவக்குறிச்சியில் எங்கள் வேட் பாளர், முகவர்களுக்கு வாக்கு எண் ணும் இடத்தில் இடம் ஒதுக்கப்பட வில்லை. இதற்கு அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்ட னர். தேசிய கட்சியின் வேட்பாளர் இல்லாமலே வாக்கு எண்ணிக்கை நடந்துள்ளது.

எங்கள் வேட்பாளரை வரவழைத்து வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண் டும் என கேட்டோம். ‘வாக்கு எண் ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப் பட்டுள்ளது. முறைகேடு நடக்க வாய்ப் பில்லை’ என்று தேர்தல் அதிகாரி கூறினார். இது நடைமுறையி்ல் சரி யானதில்லை. மறு வாக்கு எண் ணிக்கை நடக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். எங்கள் வேட் பாளருக்கும் தேமுதிக வேட்பாளருக் கும் நியாயம் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x