Published : 05 Jul 2014 02:40 PM
Last Updated : 05 Jul 2014 02:40 PM

விவேகானந்தர் வழியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் நடை பயணம்

சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்துக்களை பறைசாற்றும் விதம் பள்ளி மாணவ மாணவியரின் நடை பயணம் சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்றது, விவேகானந்தரின் கருத்துக்களை பதாகைகளில் தாங்கிய 5,550 பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ள ஆறாவது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியின் முன்னோட்டமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நடை பயணத்தை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும் இந்து அறநிலைத்துறையின் செயலாளருமான திரு.ஆர்.கண்ணன் ஐஏஎஸ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். உழைப்பாளர் சிலையில் இருந்து விவேகானந்தர் இல்லம் வரை இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப் பட்டது.

சென்னையைச் சேர்ந்த 70 பள்ளிகளின் மாணவ மாணவியர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ஒயிலாட்டம், பொய்கால்குதிரை ஆட்டம், தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ழ்சிகளும் இடம் பெற்றன.

நடைபயணத்தின் இறுதியில் விவேகானந்தர் இல்லத்திற்கு எதிராக அணிதிரண்ட மாணவர்கள் சுற்றுச்சூழலுக்கு மரியாதை, நீர்நிலைகளுக்கு மரியாதை, பெண்களுக்கு மரியாதை, ஆசிரியர்களுக்கு மரியாதை, பெற்றார்களுக்கு மரியாதை செலுத்துவேன் என்று உறுதி ஏற்றுக் கொண்டனர். மாணவர்களுக்கான உறுதி மொழியை வேல்ஸ் வித்யாஸ்ரமத்தின் திருமதி ஆர்த்தி கணேஷ் முன்மொழிந்தார்.

நிகழ்ச்சியில் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியின் பொறுப்பாளர்களான ஆடிட்டர் குருமூர்த்தி, ஆடிட்டர் பிரபாகர், தொழில் அதிபர் கணபதி, திருமதி. ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x