Last Updated : 12 Nov, 2016 11:26 AM

 

Published : 12 Nov 2016 11:26 AM
Last Updated : 12 Nov 2016 11:26 AM

சென்னை, மதுரை, கோவையில் உள்ள 50 குடிநீர் நிறுவனங்களில் 34 தரமற்றவையாக அறிவிப்பு: உணவு பாதுகாப்புத் துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை, கோவை, மதுரை உள் ளிட்ட 5 முக்கிய நகரங்களில் உள்ள 50 கேன் குடிநீர் நிறுவன மாதிரி களை மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு செய்தது. அதில், 34 நிறுவனங்களின் குடிநீர் தரமற் றவை என அதிர்ச்சி முடிவுகள் கிடைத்துள்ளன.

இந்தியாவிலேயே அதிக எண் ணிக்கையிலான கேன் குடிநீர் உற் பத்தி நிறுவனங்கள் தமிழகத்தில் தான் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 1,323 நிறுவனங் கள் கேன் குடிநீரை விற்பனை செய்ய இந்திய தர நிர்ணய அமைவனத்திடமிருந்து (பிஐஎஸ்) உரிமம் பெற்றுள்ளன. இவை தவிர, முறையாக உரிமம் பெறாமலும் குடிநீர் நிறுவனங்கள் இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், முறையற்ற கேன் குடிநீர் விற்பனை தொடர்பான வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், குடிநீர் உற்பத்தி நிறுவனங்களின் மாதிரிகளை ஆய்வு செய்து, குடிக்க ஏற்றதல்ல என்று நிரூபணமாகும் நிறுவனங்களை மூட வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி மாநில உணவு பாது காப்புத்துறை ஆணையர் உத்தர வின்பேரில் சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம், கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 நிறுவனங்களின் குடிநீர் மாதிரி கள் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டன.

பரிசோதனையின் முடிவில் 16 நிறுவனங்கள் மட்டுமே தரமான குடிநீரை விநியோகம் செய்ததும், மீதமுள்ள 34 நிறுவனங்களின் குடிநீர் தரம் குறைந்தும், குடிக்க உகந்ததாக இல்லாமல் இருப் பதும் தெரியவந்துள்ளது. இதை யடுத்து, அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்புடைய நிறுவனங்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தரமில்லாததற்கான காரணங்கள்

இது குறித்து மாநில உணவு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தானியங்கி இயந்திரங்களைக் கொண்டு கேன்களில் குடிநீரை நிரப்பும் தொழில்நுட்பம் இருந்தும், அதிக செலவு காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் கையால்தான் குடி நீரை நிரப்புகின்றன. இவ்வாறு கையால் நிரப்பும் முறையாலும் குடிநீரில் மாசு ஏற்படுகிறது. பிஐஎஸ் விதிகளும் கையால் குடிநீர் நிரப்புவதை அனுமதிக்கின்றன. இதைத் தவிர்க்க, தானியங்கி முறையில் குடிநீரை நிரப்ப வேண்டும் என விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

மேலும், குடிநீரைச் சுத்திகரிப்பு செய்யும் இடத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து செலவு அதிகமாகும். இந்தச் செலவைக் குறைத்து லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக உரிமம் பெற்ற இடத் துக்கு பதில், வேறொரு இடத்தில் குறைந்த விலையில் ‘ஆர்.ஓ. பிளான்ட்’ அமைத்து கேன்களில் குடிநீரை நிரப்பும் சம்பவங்களும் நடக்கின்றன.

இது தவிர, கேன்களுக்கு மேல் உள்ள மூடி ரூ.1-க்கும் குறைவான விலையில் எளிதாக கிடைக்கின்றன. இதனால், முறையற்ற வகையில் குடிநீரை நிரப்பி புதிய மூடியை கொண்டு மூடிவிட்டு அதன்மேல் தங்கள் விருப்பத்துக்கு தகுந்தாற்போல் தேதிகளைக் கொண்ட ஸ்டிக்கரை ஒட்டி விற்பனை செய்கின்றனர். எனவே, தரமற்ற குடிநீரை விற்பனை செய்வது தெரியவந்தால் 9444042322 என்ற எண்ணில் மாநில உணவு பாதுகாப்புத் துறையைத் தொடர்பு கொண்டு திங்கள் முதல் வெள்ளி வரை பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கவனிக்க வேண்டியவை

சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கதிரவன் கூறியதாவது:

உரிமம் பெறாத குடிநீர் நிறு வனங்களைக் கட்டுப்படுத்த மக்களி டையேயும் போதிய விழிப்புணர்வு அவசியம். குடிநீர் கேன்களை வாங்கும்போது அவை நன்றாக சீல் செய்யப்பட்டு கசிவின்றி இருக் கிறதா, தயாரிப்பு தேதி, பேட்ச் எண், ஐஎஸ்ஐ முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். மேலும், அழுக்கு படிந்த நிலையில் உள்ள கேன்களை வாடிக்கையாளர்கள் வாங்காமல் தவிர்ப்பது நல்லது என்றார்.

தீர்வு என்ன?

தமிழ்நாடு பேக்கேஜ் செய்யப் பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணை பொதுச் செய லாளர் டி.சுரேஷ்குமார் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “நாளுக்கு நாள் அதிகரித்துவரும் முறையான உரிமம் பெறாத நிறுவனங்களால் உரிமம் பெற்று விற்பவர்களும் போட்டியை சந்திக்கின்றனர். எனவே தான், முறைகேடுகளைத் தடுக்க எங்கள் சங்கம் சார்பிலும் இந்திய தர நிர்ணய அமைவனத்திடம் (பிஐஎஸ்) சில யோசனைகளை தெரிவித்துள்ளோம். முதலாவதாக குடிநீர் கேனின் மூடியில் இடம் பெறும் பேட்ச் எண், தயாரிப்பு தேதி ஆகியவற்றுடன் கூடுதலாக CM/L xxxxxxx என்ற 7 அல்லது 10 இலக்க லைசென்ஸ் எண்ணையும் அழிக்க முடியாத வகையில் அச்சிடுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். இந்த கோரிக்கையை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த இந்திய தர நிர்ணய அமைவனம் பரிசீலித்து வருகிறது. அவ்வாறு, லைசென்ஸ் எண்ணையும் மூடியில் கட்டாயமாக அச்சிடும்போது, தரமற்ற குடிநீர் கேன்களின் விற்பனையைப் பெருமளவு கட்டுப்படுத்த முடியும்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x