Published : 13 Nov 2016 11:03 AM
Last Updated : 13 Nov 2016 11:03 AM

‘தி இந்து’ - சரிகம சார்பில் ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது - 2016’ சென்னையில் இன்று இறுதிப் போட்டி: 5 பேரில் பட்டம் வெல்லப்போவது யார்?

‘தி இந்து’ சரிகம இணைந்து நடத் தும் ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது 2016’க்கான தேசிய அளவிலான இறுதிப் போட்டி சென்னை மியூசிக் அகாடமியில் இன்று நடக்கிறது. சென்னை உள்ளிட்ட மண்டல அள விலான இறுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்ற 5 பேர் இன்றைய போட்டியில் பங்கேற்கின்றனர்.

மறைந்த கர்னாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவைப் போற்றும் வகையில், இளம் கர்னாடக இசைக் கலைஞர் களுக்கு அவரது பெயரில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்படு கின்றன. ‘தி இந்து’ சரிகம சார்பில், ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது - 2016’க்கான தேர்வுகள் சமீபத்தில் நடத்தப்பட்டன. சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைத ராபாத், மும்பை ஆகிய நகரங்களில் இத்தேர்வுகள் நடந்தன.

இப்போட்டிக்காக நாடு முழு வதும் மொத்தம் 125 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர் களில் 26 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மண்டல அளவில் இறுதிச்சுற்றுப் போட்டிகள் நடத்தப் பட்டன.

இதில் தமிழகத்தில் ஆர்.கார்த்திக், கர்நாடகாவில் ராம் சாஸ்திரி, கேரளாவில் கே.எஸ்.ஹரிசங்கர், ஆந்திரா தெலங் கானாவில் தேஜாஸ் மல்லேலா, பிற மாநிலங்களுக்கான போட்டியில் தாரிணி வீரராகவன் ஆகிய 5 பேரும் வெற்றி பெற்று, தேசிய அளவிலான இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர்.

இந்நிலையில், ‘எம்.எஸ்.சுப்பு லட்சுமி விருது 2016’க்கான தேசிய அளவிலான இறுதிப் போட்டி சென்னை மியூசிக் அகாடமியின் சிற்றரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது. நாடு முழுவதும் மண்டல அளவிலான இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற 5 பேரும் இதில் பங்கேற்றுப் பாடுகின்றனர்.

இசை ஆல்பம் வெளியிடும் வாய்ப்பு

இறுதிப் போட்டிக்கான நடுவர்களாக காரைக்குடி மணி, ஓ.எஸ்.அருண், மதி, எஸ்.ராஜேஸ்வரி, ராஜ்குமார் பாரதி, டாக்டர் கே.கிருஷ்ணகுமார் ஆகியோர் செயல்பட உள்ளனர்.

இறுதிப் போட்டியில் வெல் பவருக்கு ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது 2016’ வழங்கப்படும். அவருக்கு ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி 2016க்கான சிறந்த குரல்’ என்ற பட்டமும் வழங்கப்படும். இதுதவிர, சரிகம நிறுவனம் சார்பில் இலவசமாக இசை ஆல்பம் வெளியிடும் வாய்ப்பும் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்பட வுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x