Published : 25 Nov 2016 09:39 AM
Last Updated : 25 Nov 2016 09:39 AM

தி.மலையில் மகா தீபம் ஏற்றுவதற்காக புதிய கொப்பரை செய்யும் பணி தீவிரம்: 200 கிலோ எடையில் தயாராகிறது

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்காக ரூ.2 லட்சம் மதிப்பில் புதிய கொப்பரை செய்யும் பணி நடைபெறுகிறது.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. டிசம்பர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த கொப் பரை சேதமடைந்துள்ளதால், புதிய கொப்பரை செய்யும் பணி நடைபெறுகிறது. தி.மலையில் உள்ள மண்ணு நாட்டார் தலை மையில் அவரது மகன் பாஸ்கர், ரமேஷ், சக்கரபாணி, முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர், கொப்பரை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பணியில் ஈடுபட்டுள்ள பாஸ்கர் கூறும்போது, “இதுவரை 2 கொப் பரைகள் செய்துள்ளோம். இடைப் பட்ட காலத்தில் கொப்பரையை செப்பனிடும் பணிகளை செய்து வந்தோம். 13 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவதாக புதிய கொப்பரை செய்யும் பணியை கடந்த 20-ம் தேதி தொடங்கினோம். இதுவரை செய்த 2 கொப்பரை களுக்கு செம்பு மற்றும் இரும்பு பயன்படுத்தப்பட்டது. இப்போது புதியதாக செய்யப்படும் கொப் பரைக்கு, செம்பு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ரூ.2 லட்சம் மதிப்பில் 5 அடி உயரத்தில், கீழ்வட்ட சுற்றளவு 27 அங்குலம், மேல்வட்ட சுற்றளவு 36 அங்குலம், 200 கிலோ எடையில் கொப்பரை செய்யப்படுகிறது. இதற்கான செலவை அண்ணா சிலை அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் ஏற்றுள்ளனர். புதிய கொப்பரையை செய்வதற்கு ஊதியம் பெறவில்லை.

இப்பணிகள் இன்னும் 5 நாட் களில் நிறைவுபெறும். பணிகள் முழுமை பெற்றதும், புதிய கொப்பரைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திடம் வரும் டிசம்பர் 2-ம் தேதி ஒப்படைக் கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x