Published : 04 Nov 2016 10:19 AM
Last Updated : 04 Nov 2016 10:19 AM

மதுரை, தஞ்சையில் வாகனச் சோதனை: ரூ.1 கோடி நகை, ரூ.96 லட்சம் சிக்கியது- வருமான வரி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவு

திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக் குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி களில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை யொட்டி பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை துரைச்சாமி நகர் அருகே புறவழிச் சாலையில் தேனி கோவிந்த் நகரைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் காரை எஸ்எஸ் காலனி போலீஸார் சோதனை செய்தபோது. சூட்கே ஸில் ரூ.40 லட்சம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து மாநகராட்சி பொறியாளர் அலெக்சாண்டர் தலைமையிலான அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், விருதுநகரைச் சேர்ந்த துணி வியாபாரி ராம்குமார் ராஜா விடம் ரூ.1.80 லட்சம், மதுரை தெற்குவெளி வீதியைச் சேர்ந்த நிதேஷ்குமாரிடம் ரூ.2.76 லட்சம், கேரளாவைச் சேர்ந்த சிப்பிகுட்டி யிடம் ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.46.56 லட்சம் பறிமுதல் செய் யப்பட்டது.

இவர்களில், நிதேஷ்குமார் அப்போலோ மருத்துவமனையில் உறவினர் சிகிச்சைக்கு செலுத்த பணத்தை கொண்டு சென்றதாகவும், சிப்பிகுட்டி குடும்பத்துடன் மதுரை யில் கண் மருத்துவப் பரிசோத னைக்கும், சைக்கிள் உதிரி பாகங் கள் வாங்கவும் பணம் கொண்டு சென்றதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து ஆட்சியர் கொ.வீரராகவராவ் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை ரூ.76.25 லட்சம் ரொக்கம், ரூ.1.24 கோடி மதிப்புள்ள நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.

தேர்தல் செலவுக்கு வந்ததா?

நாராயணசாமியிடம் விசாரித்த போது, அவர் தேனியைச் சேர்ந்த அதிமுக எம்ஜிஆர் மன்ற மாவட்ட நிர்வாகி என தெரிந்தது. அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் திருப் பரங்குன்றத்தில் தங்கி தேர்தல் பணியாற்றும் நிலையில் அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப் பட்டதால், கட்சியினரின் தேர்தல் செலவுக்காகக் கொண்டுவரப் பட்டதா? என்ற சந்தேகம் ஏற்பட் டுள்ளது.

இந்த பணம் சிக்கியதன் பின்னணி குறித்து அதிகாரிகள், கட்சி பிரமுகர் கள் உள்ளிட்ட பலரும் போலீஸாரி டம் விசாரிக்கத் தொடங்கினர். இதை யடுத்து தேர்தல் அதிகாரிகளிடம் பணத்தை போலீஸார் ஒப்படைத்த னர். தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். நாராயண சாமியிடம் அதிகாரிகள் விசாரித்த போது, நிலம் வாங்குவதற்காக பணத்தை கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியரிடம் கேட்ட போது, ‘‘வாகனச் சோதனையில் சிக்கும் பணம் பறிமுதல் செய்யப் படுகிறது. பணத்துக்கு முறை யான ஆவணங்களை சமர்ப்பிக் கும்போது முழு விவரம் தெரியும். ரூ.10 லட்சத்துக்கு மேல் சிக்கிய தால் நாராயணசாமியிடம் பறி முதல் செய்த பணம் குறித்து வருமான வரித் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணை நடத்துவார்கள்’ என்றார்.

தஞ்சாவூர் தனியார் குழுமத்துக்கு சொந்த மான 12 நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக, சேலத் தில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகளுடன் நேற்று வந்த வேனை, திருச்சி சாலையில் வல்லம் பிள்ளையார்பட்டி தற்காலிக சோத னைச் சாவடியில் கண்காணிப்புக் குழுவினர் தடுத்து நிறுத்தினர். வேனில் இருந்தவர்களிடம், சில கடைகளுக்கு உரிய ஆவணங்கள் மட்டுமே இருந்தன. பின்னர், வாட்ஸ்அப் மூலம் உரிய ஆவணங் களை பெற்று, அதனைக் காட்டி யதால் வேன் விடுவிக்கப்பட்டது.

இதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூரில் உள்ள ஒரு வங்கிக்கு ரூ.50 லட்சம் எடுத்து வந்த காரை, பட்டுக்கோட்டை புறவழிச் சாலை தற்காலிக சோதனைச் சாவடியில் இருந்த கண்காணிப்புக் குழுவினர் தடுத்து நிறுத்தினர். உரிய, ஆவணங்கள் இருந்ததால் கார் விடுவிக்கப்பட்டது.

மதுரையில் வாகனச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆட்சியர் கொ.வீரராகவராவ் ஆய்வு செய்தார்.

படம்:ஜி.மூர்த்தி



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x