Published : 01 Jul 2014 12:08 PM
Last Updated : 01 Jul 2014 12:08 PM

சூரிய ஒளி வெப்ப சேமிப்பு கருவி மூலம் இரவிலும் கொதிநீர்: ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை மாணவர்கள் பி.ஆர்.விஜய் பிரிதிவ், ஆர்.பிரபாகரன், ஆர். சுகுமார் ஆகியோர் இத்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ஏ.இராஜேந்திர பிரசாத் வழிகாட்டுதலுடன் சூரிய வெப்ப சேமிப்பு கருவி மூலம் இரவிலும் கொதிநீரை பெறும் வகையில் சிக்கனமான, புதுமையான கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை வர்த்தக மையத்தில் தமிழக அரசால் நடத்தப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சியில் இக்கருவி காட்சிக்கு வைக்கப் பட்டது. தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி நிறுவனம் மற்றும் சோலாரியின் குழுமம் இணைந்து இக்கண் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் அகில இந்திய அளவில் 330 கல்லூரி மாணவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.

இறுதியில் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல் பரிசை தட்டிச் சென்றது. சென்னை ஐ.ஐ.டி. இரண்டாவது பரிசையும், கோயம்புத்தூரில் உள்ள ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மூன்றாவது பரிசையும் பெற்றன.

இக்கருவி மூலம் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் சக்தியை சிக்கனமான முறையில் சேமித்து அதன்மூலம் வீடு மற்றும் தொழிற்சாலைகளில் அன்றாட தேவைக்கான சுடுநீரை பெற முடியும். இக்கருவியில் பாரஃபின் மெழுகு நிரப்பப்பட்ட சிறு தாமிர குழாய்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 50 லிட்டர் கலன் பயன்படுத்தப்பட்டுள்ளது. சூரிய வெப்பத்தால் சூடாகும் தண்ணீரில் உள்ள வெப் பத்தால் தாமிரக் குழாயில் உள்ள பாரபின் மெழுகு திரவ நிலைக்கு மாறி பின் உள்ளுறை வெப்பத்தின் மூலம் கலனில் உள்ள தண்ணீரை மேலும் அதிக சூடான நீராக மாற்றி எந்த நேரத் திலும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக் கப்பட்டுள்ளது. இந்த கருவியின் மூலம் 20 சதவீதத் துக்கும் அதிகமான வெப்பத்தை சேமித்து பயன்படுத்த முடியும். கல்லூரி தலைவர் லியோ முத்து, தலைமை நிர்வாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து, கல்லூரி முதல்வர் முனைவர் சி.வி.ஜெயகுமார் ஆகியோர் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x