தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரைகண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். 25 முதல் 27-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in