Published : 13 Sep 2022 03:59 PM
Last Updated : 13 Sep 2022 03:59 PM

சென்னை மெட்ரோ ரயில்களில் நேற்று ஒரே நாளில் 2.30 லட்சம் பேர் பயணம்

மெட்ரோ ரயில் | கோப்புப்படம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில், நேற்று (செப்.12) ஒரே நாளில் மட்டும் 2.30 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும் வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.

அந்த வகையில், ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 31.01.2022 அன்று 1,35,977 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 28.02.2022 அன்று 1,43,252 பயணிகளும், மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 28.03.2022 அன்று 2,10,634 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 25.04.2022 அன்று 1,74,475 பயணிகளும் பயணித்துள்ளனர்.

அதேபோல், மே மாதத்தில் அதிகபட்சமாக 26.05.2022 அன்று 1,91,720 பயணிகளும், ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக 03.06.2022 அன்று 2,02,456 பயணிகளும், ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 27.07.2022 அன்று 1,97,307 பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 29.08.2022 அன்று 2,20,89 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (செப்.12) ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,30,611 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 21,419 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 11,189 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 10,599 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 10,289 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளைப் (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x