Published : 18 Oct 2016 08:48 AM
Last Updated : 18 Oct 2016 08:48 AM

மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: சென்னையில் எளிமையாக நடந்த அதிமுக 45-வது ஆண்டு விழா

முதல்வர் ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் 45-வது ஆண்டு விழா எளிமையாக நடந்தது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி அதிமுகவை தொடங்கினார். கட்சியின் 45-வது ஆண்டு தொடக்க விழா, சென்னை யில் உள்ள தலைமை அலுவலகத் தில் நேற்று கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெய லலிதா, இந்த விழாவில் பங்கேற் பார். தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, விழா மலரை வெளியிடுவார். தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, ஆரவாரத்துடன் விழா நடக்கும்.

ஆனால், இந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஆண்டு விழா மிக எளிமையாக நடந்தது. கட்சித் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அவைத் தலைவர் இ.மதுசூதனன் மாலை அணிவித்து, அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். விழா மலரை மதுசூதனன் வெளியிட, முதல் பிரதியை நாமக்கல் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான எஸ்.அன்பழகன் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, செல்லூர் ராஜூ, தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், சரோஜா, வெல்லமண்டி நட ராஜன், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதல் வர் ஜெயலலிதா மருத்துவ மனையில் இருப்பதால் இனிப்பு வழங்குவது உள்ளிட்ட வழக்கமான கொண்டாட்டங்களைத் தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி கொடநாட்டில் இருந்த முதல்வர் ஜெயலலிதா, கோத்த கிரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கேயே விழா மலரையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x