Published : 05 Oct 2016 09:09 AM
Last Updated : 05 Oct 2016 09:09 AM

விழுப்புரம் பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை: 4 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை

பாஜக பிரமுகர், விழுப்புரத்தில் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் 4 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலா பாளையத்தைச் சேர்ந்தவர் ஜனா என்கிற ஜனார்த்தனன்(32). இவர் மீது ஆள் கடத்தல், கொலை வழக்குகள் உள்ளன. திருக்கோவி லூரைச் சேர்ந்த ஆசிரியர் செல்லப் பாண்டியனை கடத்தியது தொடர் பான வழக்கில் விழுப்புரம் நீதிமன் றத்தில் ஜனார்த்தனன் நேற்று ஆஜரானார். பின்னர் தன் நண்பர் சுரேஷுடன் குயிலாபாளையத் துக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.

அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே ஜனார்த்தனன் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளது. இதில் தலையில் பலத்த படுகாயமடைந்த ஜனார்த்தனன் நடுரோட்டில் கீழே விழுந்துள்ளார். அந்த கும்பல், ஜனார்த்தனன் தலையில் சரமாரி யாக வெட்டியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தடுக்க முயன்ற சுரேஷை யும் அக்கும்பல் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவல் அறிந்த விழுப்புரம் எஸ்பி நரேந்திர நாயர், விழுப்புரம் டவுன் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட ஜனார்த்தனன், விழுப்புரம் ரவுடி மணிகண்டனின் கூட்டாளி என்பதும், விழுப்புரம் மாவட்ட பாஜக இளைஞரணித் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை எதிர்தரப்பு ரவுடி கும்பல் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து அதிகம் உள்ள விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் இக்கொலை சம்பவம் நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x