Published : 03 Sep 2022 07:38 AM
Last Updated : 03 Sep 2022 07:38 AM

அதிமுகவில் அதிகாரம், பணம், பதவியை பங்கிடுவதில்தான் போட்டி - மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கருத்து

போடி: அதிமுகவில் அதிகாரம், பணம், பதவியைப் பங்கிடுவதில்தான் இருதரப்புக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும், அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் மார்க்சிஸ்ட் கட்சி பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும். மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் வரும் 5-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பால் கொள்முதல் விலையை தமிழகஅரசு உயர்த்தித் தர வேண்டும். நீதிமன்றங்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சி மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளது. அதேசமயம், விமர்சனமும் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கில், விசாரணை முடியும் முன்பே நீதிபதி முடிவை அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை, கொள்கை சார்ந்தது அல்ல. இரு தரப்பினருமே பாஜகவை ஆதரித்து வருகின்றனர். அதிகாரம், பணம், பதவி ஆகியவற்றைப் பங்கிடுவதில்தான் இரு தரப்பினரிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x