Published : 07 Oct 2016 08:40 PM
Last Updated : 07 Oct 2016 08:40 PM

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாங்களே கூட்டுவோம்: ஸ்டாலின் பேச்சு

காவிரி பிரச்சினைக்காக தமிழக அரசு 2 நாட்களில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை யென்றால், திமுக தலைமையில் கூட்டி, பிரதமரைச் சந்திப்போம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து, திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலை மையில் தஞ்சாவூர் ரயிலடி தலைமை அஞ்சலகம் எதிரில் நேற்று உண்ணாவிரதப் போராட் டம் நடைபெற்றது. இதில், மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய நிறைவுரை:

காவிரி பிரச்சினையால் டெல்டா விவசாயிகள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின் றனர். ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறந்தால்தான் காவிரி டெல்டா விவசாயத்துக்கு பயன்படும். ஆனால், தமிழக அரசு போதிய அக்கறை செலுத் தாததால், குறுவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டத் தால், தமிழக அரசு தாமதமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசு, அவசர அவசரமாக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, தீர்ப்பைச் செயல்படுத்த முடியாது என்று அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உறுதியளித்த மத்திய அரசு, பின்னர் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை மத்திய அரசே மதிக்க வில்லை என்றால், மாநிலங் களுக்கு இடையேயான நல்லுறவை யார் காப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் பிரச்சினைகள் குறித்து பேசி சுமுகத் தீர்வு காண வேண் டிய தமிழக முதல்வரும் பிரதமர் உள்ளிட்ட யாருடனும் பேசவில்லை. அதிமுக எம்பிக்கள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் பிரதமரை சந்திக்கச் சென்றனர். ஆனால், பிரதமரை சந்திக்க முடியாமல், அலுவலகத் தில் மனு அளித்துவிட்டு திரும்பி யுள்ளனர்.

இது தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானமாகும். இதற் காகவே அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

தண்ணீரை தரும் இடத்தில் உள்ள கர்நாடகா பல முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்கிறது. தண்ணீ ரைப் பெறும் நிலையில் உள்ள தமிழகத்தில் எந்தக் கூட்டமும் கூட்டப்படவில்லை.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க ஆளுங்கட்சி முயற்சி எடுக்காததால், எல்லோரும் எங்களைக் கூட்டச் சொல்கின்றனர். 2 நாட்களில் அனைத்துக் கூட் டத்தை கூட்ட வேண்டும். இல்லை யென்றால், நாங்கள் அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுத்து, பிரதமரைச் சந்திப்போம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x